Different Types Of Plastic Symbols in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. நாம் எவ்வளவு தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தாலும், அதன் உற்பத்தி அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
அப்படி நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒரு சில குறியீடுகள் இருக்கும். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? அப்படி கவனிக்காதவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
| மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..! |
பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகளுக்கு அர்த்தம்:

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் ஒரே தன்மையை கொண்டதாக இருப்பதில்லை. ஆனால் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் நம் சுற்றுசூழலை பாதிக்க கூடியவை.
நம் சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு கட்டாயம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நாம் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் PET, HDPE, PVC, LDPE, PS, PP, OTHER என்று 7 வகையான குறியீடுகள் இருக்கும். அந்த குறியீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளன. அந்த குறியீடுகள் என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
PET :

இந்த PET என்பதை Resin Identification Code என்று சொல்வார்கள். ஆனால் இதன் விரிவாக்கம் Poly Ethylene Terephthalate ஆகும். இது பிளாஸ்டிக் பொருட்களில் எந்த கலவைகள் சேர்க்கப்படுகிறது என்பதை குறிக்கும் குறியீடு ஆகும். அதாவது, இந்த குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் ஆன்டிமோனி ட்ரையாக்சைடு என்ற பொருள் சேர்க்கப்படுகிறது.
இந்த ஆன்டிமோனி ட்ரையாக்சைடு என்பது ஒரு புற்றுநோயாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உயிருள்ள திசுக்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று கூறலாம். அதுபோல இந்த குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
| டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..? |
HDPE:

HDPE என்பதை High Density Poly Ethylene என்று சொல்லப்படுகிறது. இந்த குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்து திடமான பொருட்களாக இருக்கும். இதை அதிக அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்று சொல்லலாம்.
இந்த குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் நீண்ட காலம் வலிமையானதாகவும், தடிமனாகவும் அதேபோல அடர்த்தியானதாகவும் இருக்கும்.
HDPE குறியீடு உள்ள பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். இந்த குறியீடு உள்ள பொருட்கள் உணவு மற்றும் பானங்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
PVC:

PVC என்பதை Polyvinyl Chloride என்று சொல்லலாம். இது பொதுவாக பிளாஸ்டிக் பொம்மைகள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் மற்றும் சில பாட்டில்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. நச்சுத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் PVC மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் பொருள் என்று கருதப்படுகிறது.
இதில் PVC குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதில் இருக்கும் இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். PVC குறியீடு உள்ள பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
| உங்கள் போன் Charger -ல் இது போன்ற Symbols இருக்கிறதா..? அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
LDPE:

நாம் அனைவரும் இந்த LDPE (Low Density Poly Ethylene) குறியீடு உள்ள பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். அது என்ன என்று யோசிக்கிறீர்களா..? நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களில் தான் இந்த குறியீடுகள் இருக்கின்றன. இந்த பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் லேசானதாக இருக்கும்.
அதுபோல இந்த குறியீடு உள்ள பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாது. இந்த LDPE குறியீடு உள்ள பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஆரோக்கியமற்ற ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
PP:

இந்த குறியீடுகள் சூடான வெப்பத்தை தாங்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது சூடான உணவுகளை வைப்பதற்கு இந்த PP (Poly Propylene ) குறியீடு உள்ள பொருட்கள் சரியானதாக இருக்கும்.
LDPE போலவே, PP குறியீடு உள்ள பொருட்களும் பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருளாக கருதப்படுகிறது. இருந்தாலும், இதை மறுசுழற்சி செய்ய முடியாது.
இது பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் இதை அதிகளவு பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு ஆஸ்துமா மற்றும் ஹார்மோன் சீர்குலைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
| சாலையில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன..? |
PS:

பெரும்பாலும் இந்த PS (Poly Styrene ) குறியீடுகள் உணவுப் பாத்திரங்கள், முட்டை அட்டைப் பெட்டிகள் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இந்த பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாது.
இந்த PS குறியீடுகள் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் சூடான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை பயன்படுத்தும் போது அது நம் உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது நரம்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், மரபணுக்கள், நுரையீரல், கல்லீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
OTHER:

இந்த குறியீடுகள் உள்ள பொருட்களை தவிர மற்ற பொருட்கள் எல்லாம் பொதுவான பிளாஸ்டிக் வகையை சேர்ந்தது ஆகும். இந்த பிளாஸ்டிக் பொருட்களை PC (Poly Carbonate ) என்று சொல்லலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை.
இந்த பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் நச்சுக்கள் பெண் கருப்பையில் குரோமோசோம் சேதம், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைதல் போன்ற பல்வேறு நடத்தை மாற்றங்கள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பு: பிளாஸ்டிக் பொருட்களில் அதை பற்றி சில குறியீடுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
| நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா..? |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














