முட்டை கனவில் வந்தால் என்ன பலன் | Muttai Kanavil Vanthal Enna Palan

Egg Kanavu Palangal in Tamil

கனவில் முட்டை வந்தால் என்ன பலன் | Egg Kanavu Palangal in Tamil

Kanavil Muttai Vanthal: பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இரவில் உறக்கத்தில் கனவுகள் வருவது இயல்பு. ஆனால் எல்லோருக்கும் கனவுகள் ஒரே மாதிரியாக வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் கனவுகளானது பல விதங்களில் தோன்றும். சிலருக்கு இயற்கை சம்பந்தமான கனவுகள், சிலருக்கு இறப்பு/ பிறப்பு பற்றிய கனவுகள், சுப காரியம் நடப்பது பற்றிய கனவு இது போன்ற பல வகையான கனவுகள் வரும். நமது பொதுநலம்.காம் பதிவில் All Kanavu palangal in Tamil என்ற அனைத்து கனவுகளுக்கும் தனி பக்கம் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு எது மாதிரியான கனவுகள் வருகிறதோ அவற்றிற்கான அர்தத்தினை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். சரி அதனை தொடர்ந்து இந்த பதிவில் கனவில் முட்டை வந்தால் என்ன பலன் (muttai kanavil vanthal) என்று தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா?

கனவில் முட்டையை பார்த்தால் என்ன பலன்:

உங்களுடைய ஆழ்ந்த கனவில் முட்டையை கண்டால் எதிர்கால வாழ்க்கைக்கு அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும், உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு ஏற்றது போல் மனதிற்கு திருப்திகரமாக இருக்கிறதா? இல்லையா? என்று உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள இந்த கனவானது வெளிப்படுத்திகிறது.

பெரிய முட்டை / தீக்கோழி முட்டையை கனவில் கண்டால் என்ன பலன்:

muttai kanavil vanthal enna palan: கனவில் தீக்கோழி முட்டை அல்லது பெரிய முட்டை பற்றிய கனவுகள் வந்தால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால் மகிழ்ச்சியான சூழ்நிலை கிடைக்க போகிறது என்று இந்த கனவின் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம்.

காடை அல்லது பறவை முட்டை கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் காடை முட்டை அல்லது சிறிய பறவைகளின் முட்டையை கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்காது. கனவில் சிறிய முட்டைகளை கண்டால் வாழ்க்கையில் உங்களுக்கு கஷ்டத்தினை ஏற்படுத்தும்.

கூட்டில் உள்ள முட்டைகளை கனவில் கண்டால் என்ன பலன்:

முட்டை கூட்டில் இருப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய வாழ்க்கையிலும் சரி, வீட்டிலும் சரி நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழலை குறிக்கிறது.

ஈஸ்டர் முட்டை கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் ஈஸ்டர் முட்டையை கண்டால் நல்ல நேர்மறையான எண்ணத்தினையும், ஏதோ மகிழ்ச்சியான தருணத்தை குறிக்கிறது.

திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

கனவில் உடைந்த முட்டைகள் வந்தால் என்ன பலன்:

egg kanavu palangal in tamil: உடைந்து போன முட்டைகளை கனவில் கண்டால் நீங்கள் ஏமாற்றம் அடையப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் செயல்படுத்தி நிறைவேறாத கனவுகள், தோல்வி போன்றவற்றை இந்த கனவானது வெளிப்படுத்துகிறது.

முட்டையை எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் ஒருவர் மீது நீங்கள் முட்டையை எறிவது போல் கனவு கண்டால் அடுத்தவர்களை பற்றி நீங்கள் மனதில் கவலை கொள்ளாமல் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடப்பதை உணர்த்துகிறது.

கனவில் உங்கள் மீது முட்டை எறிவது போல் கண்டால் என்ன அர்த்தம்:

ஒருவர் உங்கள் மீது முட்டையை தூக்கி எறிவது போல் கண்டால் மற்றவர்களிடம் அவமானபடப் போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

பச்சை முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் முட்டை வந்தால் என்ன பலன்: கனவில் பச்சை முட்டை சாப்பிடுவது போல் கண்டால் நீங்கள் உங்கள் மனதிற்கு பிடிக்காத ஒன்றை செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் புதிய சவால்களுக்கு உங்களை தயார் நிலை செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil