முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

first graduate certificate download

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..! how To Apply First Graduate Certificate Online..!

First Graduate Certificate Download: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் எப்படி பெறுவது என்பதன் விவரங்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். முதல் பட்டதாரி சான்றிதழ் எப்படி பெறுவது என்ற விவரம் சிலருக்கு தெரியாமல் இன்றும் இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். முதல் பட்டதாரி சான்றிதழ் இருந்தால் அரசாங்கத்தின் மூலம் நிறைய ஊக்கத்தொகைகள் கிடைக்கும். அடுத்து கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேருபவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

அடுத்து நேரடியாக டிப்ளமோ இரண்டாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் மூலம் ரூ.40,000/- வரை கல்வி கட்டணம் குறைத்து சலுகை வழங்கப்படுகிறது. மருத்துவ துறையில் படிக்கும் மாணவர்களுக்கு 1.25 லட்சம் வரை முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளவர்களுக்கு கட்டணம் குறைக்கப்படுகிறது. சரி வாங்க நண்பர்களே இப்போது முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் எப்படி பெறுவது என்ற முழு விவரங்களை படித்தறிவோம்..!

newஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

முதல் பட்டதாரி சான்றிதழ் அப்ளை செய்வதற்கு உங்களுடைய குடும்பத்தில் டிகிரி முடித்தவர்கள் இருக்க கூடாது. அதாவது உங்களுடைய பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா இவர்களில் யாரேனும் டிகிரி முடித்திருந்தால் நீங்கள் இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாது.

அடுத்து உங்களுடைய அண்ணன், அக்கா யாரேனும் டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. உதாரணத்திற்கு தம்பி, தங்கையோ தற்போது படித்து கொண்டிருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ்

தேவையான ஆவணம்:

விண்ணப்பிக்க போகும் அவர்களுடைய போட்டோ, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, டிசி(Transfer Certificate), 10/12 மதிப்பெண் சான்றிதழ், வீட்டில் இருக்கும் நபர்களின் படித்த டிசி இருக்க வேண்டும்.

ஸ்டேப்: 1

முதலில் கூகுள் ஆப்ஷனில் “tnega” என்று டைப் செய்யவும். அடுத்து அவற்றில் வரும் முதல் TNEGA என்பதை கிளிக் செய்யவும்.

first graduate certificate download

இவற்றில் citizen login என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் sign in என்பதில் தங்களிடம் அக்கவுண்ட் இல்லையென்றால் புதிதாக username கொடுத்து ஓபன் செய்யலாம். பழைய அக்கவுண்ட் இருப்பவர்கள் லாகின் செய்து கொடுக்கலாம்.

அடுத்து கீழே captcha-வில் இருக்கும் எழுத்துக்களை சரியாக கொடுத்து லாகின் செய்யவும்.

ஸ்டேப்: 2

லாகின் செய்த பிறகு “Revenue Department” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அவற்றை கிளிக் செய்த பிறகு “First Graduate Certificate” என்பதை ஓபன் செய்யவும்.

அடுத்து தேவையான ஆவணங்கள் சரியாக கொடுத்து ஒருமுறை செக் செய்த பிறகு proceed என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 3

அடுத்ததாக “register can” நம்பர் கொடுக்க வேண்டும். இந்த எண் தெரியாதவர்கள் உங்களுடைய பெயர், அப்பா பெயரினை வைத்து search செய்யலாம்.

அடுத்து search உள்ள can number பாக்ஸை கிளிக் செய்யவும். அவற்றில் “Generate OTP” என்ற ஆப்ஷனை கொடுக்கவும். அடுத்து நீங்கள் ரெஜிஸ்ட்டர் செய்த எண்ணிற்கு OTP எண் வரும். அந்த எண்ணை OTP உள்ள இடத்தில் கொடுத்து Conform OTP கொடுக்கவும்.

ஸ்டேப்: 4

அடுத்து Proceed கொடுக்கவும்.

இப்போது இந்த விண்ணப்ப படிவம் ஓபன் ஆகும். இந்த படிவத்தில் இதற்கு முன் டிகிரி முடித்தவர்கள் உண்டா என்ற இடத்தில் இல்லை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அடுத்து குடும்ப உறுப்பினர் பெயரினை சேர்க்க வேண்டும். படிவத்தில் அப்பாவின் அப்பா பெயரினை குறிப்பிட வேண்டும். அவர்களின் வயது தகுதி, கல்வி தகுதி, உறவு முறை, அடுத்து அப்பாவின் அப்பா உயிருடன் இருக்கிறார்கள் என்றால் ஆம்/ இல்லை என்ற ஆப்ஷனை சரியாக கொடுத்து add செய்யவும். இது போன்று குடும்பத்தின் அனைத்து நபர்களையும் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்: 5

அடுத்து கல்வி தகுதி என்ற இடத்தில் சரியான தகுதியை நிரப்பவும். அதன் பிறகு கல்வி பயின்ற ஆண்டை சரியாக கொடுக்கவேண்டும். அடுத்து current course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுக்க வேண்டும். Institute என்பதில் நீங்கள் தேர்வு செய்து வைத்த கல்லூரியின் பெயரினை மற்றும் முகவரியை குறிப்பிட வேண்டும். அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த சான்றிதழை பயன்படுத்திக்கொள்ளலாம். கடைசியாக செக் செய்த பிறகு submit என்பதை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

அடுத்து விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்யவும். டவுன்லோடு செய்த பிறகு உங்களுடைய கையெழுத்தினை இட வேண்டும். அடுத்து select ஆப்ஷனில் உங்களுடைய போட்டோ அட்டாச் செய்ய வேண்டும்.

போட்டோவின் அளவானது 50 kb அளவிற்கு இருத்தல் வேண்டும். அடுத்ததாக address proof-ற்கு ஆதார் கார்டு/ வாக்காளர் அட்டை/ பான் கார்டு கொடுக்கலாம்.

விண்ணப்பதாரரின் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து அட்டாச் செய்யவும். சான்றிதழ் அனைத்தும் ஒரிஜினல் உள்ளவற்றை வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 7

அடுத்து செலக்ட் ஆப்ஷனில் current academic year certificate என்பதில் தங்கை இருந்தால் அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் அல்லது Transfer certificate வைக்க வேண்டும். பிறகு அப்பா, அம்மாவின் Transfer certificate இணைத்து அப்லோட் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 8

அடுத்து self declaration of applicant என்ற ஆப்சன் உள்ளதை டவுன்லோட் செய்யவும். self declaration of applicant இவற்றில் பெற்றோர்கள் படிக்கவில்லை என்றால் அவர்களின் கையெழுத்தினை அட்டாச் செய்ய வேண்டும்.

அடுத்து ஸ்மார்ட் கார்டு அட்டாச் செய்யவேண்டும். சான்றிதழ் விவரம் கொடுத்த பிறகு செக் செய்து விட்டு Make Payment ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 8

கட்டணமாக நீங்கள் ரூ.60/- செலுத்த வேண்டும். அதன் பிறகு கீழே உள்ள கட்டத்தில் டிக் செய்த பிறகு Make Payment என்பதை கொடுக்க வேண்டும்.

credit, debit, internet banking, QR,UPI இவற்றில் ஏதேனும் ஒரு கணக்கில் தொகையினை செலுத்தவேண்டும்.

ஸ்டேப்: 8

தொகை செலுத்திய பிறகு ரெசிப்ட் ஒன்று வரும். அந்த ரெசிப்டில் உங்களுடைய சான்றிதழ் எண் வந்துவிடும்.

இந்த எண்ணை வைத்து செக் செய்வதற்கு Check Status என்பதில் view application கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம் சரி செய்வதற்கு ஆப்ஷன் 2:

கூகுளில் TN Certificate Verification என்று டைப் செய்யவும். அவற்றில் Click here to Login என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து இதில் Acknowledgement என்ற ஆப்ஷனில் உங்களுடைய சான்றிதழ் எண்ணை கொடுத்து வெரிஃபை செய்யலாம். இந்த சான்றிதழை நீங்கள் PDF முறையில் தான் ஓபன் செய்யலாம். ஏனென்றால் உங்களுடைய டிஜிட்டல் கையெழுத்தானது அப்போதுதான் சரியாக ஏற்கும்.

படிவத்தில் பச்சை வண்ணத்தில் டிக் வருவது PDF-ல் மட்டும்தான் வரும். இதுபோன்று தான் முதல் பட்டதாரி சான்றிதழ் படிவம் வரும். அவ்ளோதாங்க ஆன்லைன் மூலம் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறைகள்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்..!

newஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..! how To Remove Name In Smart Card Online..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil