பூக்கள் கனவில் கண்டால் என்ன பலன் | Pookal Kanavil vanthal
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கனவில் பூக்களை கண்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..! ஒவ்வொரு கனவிற்குமே ஒவ்வொரு பலன் இருக்கிறது என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். அனைவருக்கும் கனவானது ஒரே மாதிரியாக வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் கனவுகளானது மாறுபட்ட வகையில் தான் வருகிறது. அந்த வகையில் இப்போது கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன் என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
மலர்களும் அதன் மருத்துவ பயன்கள்..! |
மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்:
நம்முடைய கனவில் மல்லிகை பூவினை கண்டால் மிகவும் நல்லது. கனவில் மல்லிகை பூ வந்தால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
வெள்ளை தாமரை கனவில் வந்தால் என்ன பலன்:
வெள்ளை தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும். கல்வியில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் ரோஜா பூ வந்தால் நீங்கள் செய்த செயல்களுக்கு பாராட்டு மழை வந்து குவியும். மேலும் அனைத்து செயல்களிலும் நன்மை கிடைக்கும்.
முல்லை பூ கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் முல்லை பூ வந்தால் அம்மா வழியை சார்ந்தவர்களால் தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.
பன்னீர் பூ கனவில் வந்தால் என்ன பலன்:
பன்னீர் பூவினை நம் கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல் வந்தடையும்.
பவளமல்லி பூ கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் பவளமல்லி பூவை கண்டால் தந்தை வழியை சார்ந்த உறவினர்களால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
சாமந்தி பூ கனவில் வந்தால்:
சாமந்தி பூவினை கனவில் கண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க போகிறது என்று அர்த்தம்.
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன் |
வாடாமல்லி பூ கனவில் வந்தால் என்ன பலன்:
வாடாமல்லி பூவை கனவில் கண்டால் உறவினர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கக்கூடும்.
அல்லி பூ கனவில் கண்டால் என்ன பலன்:
அல்லி பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
செடியில் பூக்களை பறிப்பது போல் கனவு பலன்:
செடியில் பூக்களை நீங்கள் பறிப்பது போல் கனவு கண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் புதிதாக நிலம், வீடு, அணிகலன் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் மஞ்சள் நிற பூக்களை கண்டால் வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் தாமரை, வெள்ளைப்பூக்கள், பூமாலை போன்றவற்றை அடுத்தவர்களிடம் இருந்து பெறுவது போல் கனவு கண்டால் பெரும்புகழ் உங்களை வந்து சேரும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |