FMB என்றால் என்ன?

Advertisement

Field Measurement Book Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்று நம்முடைய பொதுநலம். காம் பதிவில் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் FMB Map என்ற வார்த்தையை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். அதாவது ஒரு நிலம் மற்றும் வீட்டு மனையை வாங்கும் போதோ அல்லது விற்கும்போதோ பட்ட, சிட்டா மற்றும் FMB என்று சொல்லப்படும் நில வரைபடத்தினை  கேட்பார்கள். இந்த FMB என்கிற நிலவரை படத்தை வைத்து தான் நிலத்தின் தன்மையை உறுதி செய்ய முடியும். உங்களின் நிலம், வீடு ஆகியவற்றின் FMB வரைபடத்தினை எப்படி Download செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள் ⇒ பட்டா சிட்டா என்றால் என்ன தெரியுமா.?

FMB என்றால் என்ன?

FMB என்பது ஒரு நிலத்தின் பல்வேறு தகவல்களை வரைபடம் மற்றும் அளவுகள் மூலம் விளக்கூடிய ஒரு படமாகும். இது நில அளவையாளர் மூலம் அளவீடு செய்யப்பட்டு வரையப்படும்.

நிலத்தின் பரப்பளவு, சர்வே நம்பர், உட்பிரிவு நம்பர், கிணறு, நடை பாதை, நீர் செல்லும் பாதைகள் மற்றும் உயர் மின்னழுத்த லைன் இதுபோன்ற பல்வேறு விவரங்களும் இந்த FMB வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த FMB நிலவரைபடம் பல்வேறு வகைகளில் கிடைக்குறது. அதில் 4 வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • நகர  நிலஅளவை வரைபடம் 
  • கிராம வரைபடம் 
  • உட்பிரிவு எண் வரைபடம் 
  • சர்வே எண் வரைபடம்  

FMB வரைபடத்தின் வேறு பெயர்கள்:

  • நில வரைபடம் 
  • நிலப்படம் 
  • புலப்படம் 
  • நில உரிமைப்படம் 

How to Download FMB Map Online in Tamil:

உங்களுடைய நிலம், வீடு இதுபோன்ற சொத்துக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே புல வரைபடங்களை Download செய்யும் வசதியை தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த நில வரைபடத்தை எப்படி Download செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டேப்- 1

 

முதலில் www.eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டேப்- 2

fmb sketch rural in tamil

அந்த இணையதளத்தை click செய்து உள்ளே சென்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் FMB Sketech – Rural என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்டேப்- 3

fmb map in tamil.jpg

மேலே கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள District, Taluk, Village, Survey Number, Sub Division Number இது போன்ற அனைத்து விவரங்களையும் சரியாக கொடுக்கவும்.

ஸ்டேப்- 4

முழு விவரங்களும் சரியாக கொடுத்த பிறகு கடைசியில் உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

ஸ்டேப்- 5

nilavaraipadam in tamil

நீங்கள் Submit பட்டனை அழுத்திய பிறகு அடுத்ததாக மேலே கொடுக்கபட்டுள்ளது போல்  View FMB என்பதை click செய்யவும்.

ஸ்டேப்- 6

sarvey number in tamil

இப்போது நீங்கள் உள்ளே கொடுத்த சர்வே எண்ணிற்கான FMB வரைபடம் தெரிகிறது.  அதனை Download செய்வதற்கு நீங்கள் படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல்  Download என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களுடைய சர்வே எண்ணிற்கான FMB வரைபடம் கிடைத்துவிடும்.

நீங்கள் எளிய முறையில் இது மாதிரி ஆன்லைன் மூலம் Download செய்து கொள்ளலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement