கனவில் தங்கம் வந்தால் நல்லதா கெட்டதா | Gold Kanavu Palangal in Tamil
Gold Kanavu Palangal in Tamil: கனவுகள் என்பது பொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது வரக்கூடியது. நமது ஆள் மனதில் நாம் என்ன நினைத்து கொண்டிருக்கின்றோம் அந்த நினைவுகள் தான் நமக்கு கனவாக வரும். ஆகவே நமது மனதில் நல்ல எண்ணங்களை நினைக்கிறோம் என்றால் நல்ல கனவாக இருக்கும்.
அதுவே ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து உங்களை நீங்களே வருந்தி கொண்டு உறங்கும் பொழுது அது கெட்ட கனவாக தான் இருக்கும். ஆகவே நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் நினைத்து உறங்குங்கள். சரி இந்த பதிவில் கனவு சாஸ்த்திரம் அடிப்படையில் கனவில் தங்கம் வந்தால் நல்லதா கெட்டதா என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.
தங்கம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?
தங்களுடைய கனவில் ஒரு தங்க தேரினை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் செய்யப்போகின்ற ஒரு விஷயத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் என்பதன் அறிகுறியாகும்.
கனவில் தங்கம் வந்தால் என்ன நடக்கும்?
உங்களுடைய கனவில் நகையை காண்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நகைகள் கனவில் வருவது பெருபாலும் தங்களுக்கு வர இருக்கும் செலவினை குறிக்கிறது. அந்த செலவுகள் பெரும்பாலும் திருமணம் அல்லது குடும்பத்துடனான சுற்றுலா போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
கனவில் தங்கம் வந்தால் என்ன பலன்? | Nagai Kanavil Vanthal
உங்களுடைய கனவில் நகையை எப்பவாது பார்த்தால் அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்றால்? அது உங்கள் சந்தோச தருணத்தின் செலவினை குறிக்கும் ஒன்று.
நகையை அதிகமாக கனவில் பார்த்தாலோ அல்லது குறைவாக பார்த்தாலோ அந்த கனவு நன்மைக்கே.
தங்க மோதிரத்தை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக உழைப்பித்திருப்பீர்கள், அதற்கான பலன் ஆனது கிடைக்காமல் இருந்திருக்கிற்கும். அதற்கான பலன் கிடைக்க போகிறது என்பதனை குறிக்கிறது.
தங்க செயினை கனவில் கண்டால் நெருங்கிய உறவினர்கள் அல்லது நேரிய நண்பர்களுடன் இருக்கும் உறவானது பலப்படும் என்பதனை குறிக்கிறது.
தங்க கட்டியை கனவில் கண்டால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் இருக்கும், உறவானது ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்கும் என்பதனை குறிக்கிறது.
தங்க நெக்லஸ் பற்றி கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத ஆசை இருந்தால் அவை நிறைவேறும் என்பதனை குறிக்கிறது. தங்க தோடு கனவில் கண்டால் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதனை குறிக்கிறது.
கனவில் தங்கம் வாங்குவது போல் கனவு கண்டால் அது நல்ல விதமான பலன்களை குறிக்கிறது. இதுநாள் வரையிலும் உடல் நலத்தில் குறைபாடுகள் இருந்தால் அது விரைவில் நீங்கி ஆரோக்கியமாக இருக்க போகிறீர்கள் என்பதை இத்தகைய கனவு ஆனது குறிக்கிறது.
இனி உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான் என்பதையும், அதற்கான வெற்றி பாதைகள் திறந்து இருக்கிறது என்பதையும் குறிக்கும் அர்த்தமாக சொல்லப்படுகிறது.
தங்கம் கனவில் வந்தால் என்ன பலன்?
தங்களுடைய கனவில் நீங்கள் நகையை பரிசளிப்பது போல் அல்லது உங்கள் துணைவர் அல்லது துணைவி நகையை பெறுவதை போல் கனவு கண்டால் நீங்கள் விரைவில் மிகப் பெரிய லாபத்தை பெற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் அந்த கனவு தங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பை தரப்போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் தங்கம் வந்தால் என்ன நடக்கும்?
யாராவது ஒருவர் நகையை அணிந்திருப்பது போல் கனவு கண்டால், உங்கள் நெருங்கிய உறவினருக்கு பிரச்சனைகள் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் நகை தொலைந்தால்:
அதுபோல தங்கம் தொலைவது போல நம்மில் பலருக்கும் கனவு வந்திருக்கும். பொதுவாக தங்கம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தங்க நகை தொலைவது போல நாம் கனவு கண்டால் அது எதிர்மறையான விஷயங்கள் வர போகிறது என்று அர்த்தம்.
தங்கம் கிடைப்பதுபோல கனவு கண்டால்:
அதுபோல ஒருவருக்கு தங்கள் கிடைப்பது போல கனவு வந்தால் அவருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் தொடங்கும் செயல்கள் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும்.
| இதையும் படியுங்கள் –> இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |








