கோத்திரம் என்றால் என்ன..? | Gothram in Tamil

Gothram in Tamil

கோத்திரம் வகைகள் | Gothram in Tamil List 

நண்பர்களே வணக்கம்..! இன்று நமது பதிவில் கோத்திரம் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக தாத்தா பாட்டி சொல்ல கேட்டிருப்போம் அவன் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று. அது போல் தான் சில வார்த்தைகளுக்கு பல அர்த்தகளை தருவது தமிழ் அந்த வகையில் இன்று கோத்திரம் என்றால் என்ன என்பதையும், அதன் வகைகளையும் பற்றி பார்க்க போகிறோம்.

கர்மா என்றால் என்ன?

கோத்திரம் என்றால் என்ன:

  • நம் முன்னோர்கள் எது செய்தாலும் நம் நல்லதுக்கு என்று நினைத்து அவர்களை பின் பற்றி வருகிறோம். அந்த வகையில் கோத்திரத்தை பின் பற்றி வருகிறோம். கோத்திரம் என்பது ஒருவரின் வம்சத்தை குறிக்கும் சொல் ஆகும். அவர் எந்த வம்சத்தை சார்ந்தவர்கள் என்று நாம் முன்னோர்கள் கேட்கமாட்டார்கள் அவர் என்ன குலத்தை சார்ந்தவர் அல்லது என்ன கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று தான் கேட்பார்கள்.

கோத்திரம் எத்தனை வகைப்படும்:

இந்துக்கள் அனைவரும் ரிஷி இனத்தின் வழியில் வந்தவர்கள் என்று சொல்வார்கள் அப்படி ரிஷி வழியில் வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குலம் உண்டு. அந்த வகையில் கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம் விஸ்ணு கோத்திரம் சொல்வது உண்டு. இந்த கோத்திரம் குறிப்பாக அதிகம் பிராமிணர்கள் வழியில் அதிகம் நடை முறையில் உள்ளது.

1. பிருகு
2. அங்க்ரஸர்
3. அத்ரி
4. விச்வாமித்ரர்
5. வஸிஷ்டர்
6. கஸ்யபர்
7. அகஸ்த்யர்.

மரண யோகம் என்றால் என்ன?
  • பொதுவாக பெண்களுக்கு கணவன் கோத்திரத்தை தான் பெண்ணும் அவர்களின் கோத்திரம் என்று சொல்வார்கள். ஒரே கோத்திரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்ய மாட்டார்கள்.
  • இருவரும் ஒரே குலத்தை சேர்ந்தவராக இருந்து அவர்கள் இருவரும் பார்க்கதவறாக இருந்தாலும் அவர்களை சகோதரர்கள் என்று கருதப்படுவார்கள். அதனால் ஒரே குலத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்ய கூடாது என்று சொல்வார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil