How Fingerprint Is Formed in Tamil
அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் இருக்கும் திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகளைக் கைரேகை Fingerprint என்று கூறுகிறோம். இந்த உலகில் எத்தனையோ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கைரேகையை மட்டும் யாருடனும் ஒப்பிட முடியாது. அதுபோல கைரேகை எப்படி உருவாகிறது. கைரேகை பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் பாருங்கள் ⇒ கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?
கைரேகை:
இன்றைய நிலையில் மனிதர்கள் தொடும் இடங்களில் விட்டுச்செல்லும் தடயத்தை கைரேகை என்று கூறுகிறோம். இது அறிவியலின் ஒரு முக்கியமான செயல் முறையாகும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கைரேகை என்பது இருக்கும். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் குற்றம் நடந்த இடத்தில் ஒருவரின் கைரேகையை வைத்து தான் அவர் குற்றவாளியா இல்லை நிரபராதியா என்பதை உறுதி செய்கிறார்கள்.
எத்தனை கோடி மக்கள் இங்கு வாழ்ந்தாலும் ஒருவரின் கைரேகை மற்றவருடன் ஒத்துப்போகாது. அவ்வளவு ஏன், இரட்டையாக பிறந்தவர்களின் கைரேகை கூட ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
Fingerprint எப்படி உருவாகிறது..?
கைரேகை என்பது ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே உருவாகிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது 10 வாரத்தில் இருந்து உருவாக தொடங்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, விரலின் மேல் பகுதியை Volar pad என்று சொல்கிறார்கள். விரலின் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையில் திசுக்கள் (Basal Layer) இருக்கின்றன. அந்த திசுக்களின் வளர்ச்சி காரணமாக விரலின் மேல் பகுதியில் மடிப்புகள் உருவாகின்றன. இப்படி உருவாகும் இந்த மடிப்புகளை தான் நாம் கைரேகை என்று சொல்கிறோம்.
இந்த கைரேகை Loops, Whorls மற்றும் Arches என்ற 3 அமைப்புகளை கொண்டுள்ளது.
நம் உடலில் இருக்கும் ஜீன் என்று சொல்லக்கூடிய மரபு பொருள் அல்லது திரவங்களாலும் கைரேகையில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது, ஒவ்வொரு மனிதனின் உடலில் இருக்கும் மரபு பொருளின் ஜீன் மற்றும் மற்ற சூழ்நிலைகளின் காரணமாக தான் கைரேகையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் தான் ஒருவரின் கைரேகை மற்றவர்களின் கைரேகையுடன் ஒத்துப் போவதில்லை.
இவ்வளவு வேறுபாடுகள் கைரேகையில் இருப்பதால் தான் இதை தனிமனித அடையாளமாகவும், குற்றங்கள் நடக்கும் இடங்களில் தடயங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல நம் தோலில் இருந்து சுரக்கக்கூடிய ஒரு விதமான கொழுப்பு பொருளும் வியர்வையும் தான் நாம் ஒரு பொருளை தொடும் போது கைரேகை உருவாக காரணமாக இருக்கிறது.
இந்த கைரேகை நாம் கருவில் இருக்கும் போதே ஆழமாக உருவாவதால் இது தீக்காயங்கள் போன்றவற்றால் அழிவதில்லை.
அதுபோல, நம் கைகளில் இருக்கும் ரேகைகள் போல கால்களிலும் ரேகைகள் இருக்கின்றன. இந்த காலில் இருக்கும் ரேகைகளும் மற்றவர்களுடன் ஒத்துப் போவதில்லை.
மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.? |
மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Interesting Information |