1 டிரில்லியன் என்பது எத்தனை பில்லியன் தெரியுமா..?

How Many Billion in One Trillion in Tamil

தினமும் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் ஒரு டிரில்லியன் என்றால் எத்தனை பில்லியன் என்பதை பற்றியும் ஒரு டிரில்லியனில் எத்தனை சைபர்கள் உள்ளது போன்ற தகவல்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து ஒரு டிரில்லியன் என்றால் என்ன மதிப்பு என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 1 கோடிக்கு எத்தனை சைபர் வரும் உங்களுக்கு தெரியுமா..?

How Many Billion in One Trillion in Tamil:

How many zeros in a trillion in tamil

பொதுவாக மேற்கத்திய எண்முறையில் ஒரு டிரில்லியன் என்றால் ஓராயிரம்(1000) பில்லியன் ஆகும். ஒரு டிரில்லியன் என்பது 1,000,000,000,000 என்று எண்மதிப்பில்  எழுதப்படுகிறது.

அதாவது ஒன்றுக்கு பின் 12 சைபர்கள் இருக்கும்படி எண்மதிப்பில் எழுதலாம். அதாவது அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன் என்பது 1012 என எழுதப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரு மில்லியன் என்பது எத்தனை லட்சம் என்று தெரியுமா?

ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் மும்மடி ஆயிரம் (1000 X 1000 3). இதே போல் குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் நான்கு மடி ஆயிரம் (1000 X 1000 4). அதே போல் குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் ஐந்துமடி ஆயிரம் (1000 X 1000 5).

இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. இந்த எண்களின் பெயரின் முன் வரக்கூடிய டிரி (Tri), குவார்ட் (Quart), குவின்ட் (Quint) என்பன மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil