ஆதார் அட்டையில் எத்தனை தொலைபேசி எண்களை லிங்க் செய்யலாம் தெரியுமா?
ஹாய் நண்பர்களே..! இந்த நவீன உலகத்தில் அனைத்திற்கும் பயன்பட கூடிய ஆதார் அட்டையில் நமக்கு தெரியாத விஷயத்தை தெரிந்துக்கொள்ள போகிறோம். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு முதலில் கேட்பது உங்களிடம் ஆதார் அட்டை இருக்கிறதா என்று தான். ஒரு தடுப்பூசி போட வேண்டும் என்றால் கூட ஆதார் அட்டை அவசியமானதாகும். அத்தகைய ஆதார் அட்டையில் நீங்கள் எத்தனை தொலைபேசி எண்களை இணைக்கலாம். அதற்கு முன் இணைத்த தொலைபேசி எண்ணை நீக்குவது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி..?
ஆதார் அட்டையில் எத்தனை தொலைபேசி எண்களை இணைக்கலாம்?
ஒருவருடைய தனி நபர் அடையாளமாக இருக்கக்கூடியது தான் ஆதார் அட்டை. அந்த ஆதார் அட்டை எடுக்கும் போது ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து இருப்பார்கள். காலப்போக்கில் அந்த தொலைபேசி எண் இல்லாமல் சிலருக்கு போகிருக்கும். அதனால் மீண்டும் வேறு தொலைபேசி எண்ணை இணைத்து இருப்பார்கள்.
இது மாதிரி ஒருவர் தனது ஆதார் அட்டையுடன் ஒன்பது தொலைபேசி எண்களை இணைக்கலாம். அதுமட்டும் இல்லாமல் இதுவரை நீங்கள் எத்தனை தொலைபேசி எண்களை இணைத்து இருக்கீர்கள் என்பதை கண்டறியும் வசதி இணையத்தளத்தில் இருக்கிறது.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி..? |
ஆதார் அட்டையில் தொலைபேசி எண்னை நீக்குவது எப்படி?
உங்களுடைய ஆதார் அட்டையில் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக இணைத்து இருப்பீர்கள். அது மாதிரி தொலைபேசி எண்ணை இணைக்கும் போது முன்பு இணைத்த தொலைபேசி எண் இல்லை என்றால் வேறு எண்ணை இணைப்பது வழக்கம்.
அப்படி நீங்கள் நிறைய தொலைபேசி எண்களை இணைத்து இருந்தால் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்களை நீக்கும் வசதி இணையத்தளத்தில் உள்ளது.
தொலைபேசி எண்ணை நீக்குவது எப்படி என்று TAFCOP என்ற இணையதளத்தின் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
Step- 1
முதலில் https://tafcop.dgtelecom.gov.in/ இன்ற இணையதளத்திற்கு செல்லவும். அதன் பிறகு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு பக்கம் வரும் அதில் உங்களுடைய தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
Step- 2
அதற்கு பின் நீங்கள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTP எண்ணை கொடுத்தால் நீங்கள் இதற்கு முன்பு இணைத்த தொலைபேசி எண்களின் பட்டியல் வரும்.
Step- 3
இப்போது நீங்கள் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்ணை நீக்கிவிடலாம். அதன் பிறகு நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில்நுட்ப செய்திகள் |