தெற்கு ஆப்பிரிக்கா பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..! | Facts About South Africa in Tamil 

Interesting facts about south africa in tamil

தெற்கு ஆப்பிரிக்கா பற்றிய சுவாரசியமான தகவல்கள்..! | Facts About South Africa in Tamil 

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் அருமையான மற்றும் சுவாரசியமான தகவலை பற்றி தான். அப்படி என்ன தகவல் என்றால் தெற்கு ஆப்பிரிக்கா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தான். நாம் அனைவருக்கும்  தெற்கு ஆப்பிரிக்கா என்றதும் நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா தான் நினைவிற்கு வருவார். ஆனால் அங்கு இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.

Facts About South Africa in Tamil :

Facts about south africa in tamil

பிரிட்டோரியா, மற்றும் கேப் டவுன் ஆகிய தலைநகரங்களை கொண்டுள்ள ஒரே நாடு தென் ஆப்பிரிக்க.

9 மாகாணங்களை தனக்குள் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா ஒவ்வொரு மாகாணங்களுக்கும் தனித்தனியே சட்டமன்றம், நிர்வாகம், பிரதமர் ஆகியவை கொண்டுள்ளது.

9 மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நடால் மட்டும் முடியாட்சி கொண்டு இயங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா ஒன்று அல்ல இரண்டு அல்ல மொத்தம் 11 மொழிகளை அதிகார பூர்வ மொழியாக கொண்டுள்ளது.

உலகின் மிக பழமையான மலைகளில் ஒன்றான டேபிள் மலை(Table Mountain) தென் ஆப்பிரிக்காவில் தான் உள்ளது. இந்த மலை 260 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.

உலகில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இரண்டாவதாக உள்ள துகேலா நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ளது. இது 2,800 அடி உயரமானது.

தங்கத்தை விட விலை மதிப்புள்ள பிளாட்டினம் இங்கு தான் அதிகமாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால் உலகில் உள்ள பிளாட்டினத்தில் 80 சதவிகிதம் இங்குதான் உள்ளது.

காடுகளில் உலகில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும் ஆப்பிரிக்காவில் தான் உள்ளதாம்.

உலகின் அதிக இறைச்சி உற்பத்தியில் முக்கியமான பங்கு வகிக்கிறது தென் ஆப்பிரிக்கா.

உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த நாடு தென் ஆப்பிரிக்கா தான்.

இதையும் படியுங்கள்=> ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் தேசிய விலங்குகள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil