கம்பராமாயணம் சிறு குறிப்பு | Kamba Ramayanam 6 Kandam in Tamil
கம்பராமாயணம் இராமன் பற்றிய கதை ஆகும். கம்பராமாயணம் என்னும் நூல் முதல் குலோத்துங்க சோழனின் சொல்லின் படி கம்பர் எனும் ஒரு புலவரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். இந்த நூல் வடமொழியில் வால்மீகி முனிவரின் மூலம் இயற்றப்பட்டது. இந்நூலில் ஆறு கண்டங்கள், 123 படலங்கள் 1,500 பாடல்களையும் கொண்டது. அதனை பற்றியும் கம்பராமாயணத்தின் குறிப்பு பற்றி தெளிவாக காண்போம்.
ஆறு படலங்களில் முதலாவது காண்டம் பாலகாண்டம். இராவணனை அழிக்க இராமன் மனிதனாக அவதாரம் எடுப்பது பாலகாண்டம் ஆகும். இந்த காண்டம் 24 படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
ஆற்றுப் படலம்
நாட்டுப் படலம்
நகரப் படலம்
அரசியற் படலம்
திரு அவதாரப் படலம்
கையடைப் படலம்
தாடகை வதைப் படலம்
வேள்விப் படலம்
அகலிகைப் படலம்
மிதிலைக் காட்சிப் படலம்
கைக்கிளைப் படலம்
வரலாற்றுப் படலம்
கார்முகப் படலம்
எழுச்சிப் படலம்
சந்திரசயிலப் படலம்
வரைக்காட்சிப் படலம்
பூக்கொய் படலம்
நீர் விளையாட்டுப் படலம்
உண்டாட்டுப் படலம்
எதிர்கொள் படலம்
உலாவியற் படலம்
கோலம்காண் படலம்
கடிமணப் படலம்
பரசுராமப் படலம்.
அயோத்தியா காண்டம்:
அயோத்தியா காண்டம் என்பது இராமாயணத்தில் இரண்டாவது காண்டம் ஆகும்.
சீதையை திருமணம் செய்து கொண்டு இராமன் காட்டை ஆழச் செய்வது இந்த காண்டத்தில்தான்.
ஆரண்ய காண்டம் இராமாயணத்தில் மூன்றாவது காண்டம் ஆகும். இராமன் காட்டில் அரக்கர்களை பற்றியும், ஆயுதங்களை பற்றியும் தெரிந்துகொள்வது இந்த காண்டத்தில் நடைபெறுகிறது. இந்த காண்டம் 13 படலங்களைக் கொண்டுள்ளது.
விராதன் வதைப் படலம்
சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
அகத்தியப் படலம்
சடாயு காண் படலம்
சூர்ப்பணகைப் படலம்
கரன் வதைப் படலம்
சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
மாரீசன் வதைப் படலம்
இராவணன் சூழ்ச்சிப் படலம்
சடாயு உயிர் நீத்த படலம்
அயோமுகிப் படலம்
கவந்தன் படலம்
சவரி பிறப்பு நீங்கு படலம்.
கிட்கிந்தா காண்டம்:
கிட்கிந்தா காண்டம் இராமாயணத்தின் நான்காவது படலம் ஆகும். இராமன் சீதையை தேடி செல்வது இந்த காண்டத்தில் நடைபெறுகிறது. இந்த காண்டம் 17 படலங்களை கொண்டுள்ளது, அதன் பெயர்களை காண்போம்.
பம்பை வாவிப் படலம்
அனுமப் படலம்
நட்புக் கோட்படலம்
மராமரப் படலம்
துந்துபிப் படலம்
கலன் காண் படலம்
வாலி வதைப் படலம்
தாரை புலம்புறு படலம்
அரசியற் படலம்
கார்காலப் படலம்
கிட்கிந்தைப் படலம்
தானை காண் படலம்
நாட விட்ட படலம்
பிலம் புக்கு நீங்கு படலம்
ஆறு செல் படலம்
சம்பாதிப் படலம்
மயேந்திரப் படலம்.
சுந்தர காண்டம் படலங்கள்:
சுந்தர காண்டம் இராமாயணத்தின் ஐந்தாவது காண்டமாகும். சீதையை அனுமன் குரங்கு வடிவத்தில் காண்பது. அனுமனை பற்றி கூறுவது இந்த காண்டத்தில் நடைபெறுகிறது. இந்த காண்டத்தில் 14 படலங்கள் உள்ளன, அதன் பெயர்கள் பின்வருமாறு.