“நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

கவரிமான் பரம்பரை | Kavari Maan Parambarai

நாம் செய்யும் சிலவற்றை ஒப்பிட்டு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்லி சிரிப்பதும், நக்கல் செய்வதும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சில பழமொழிகள் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் நிறைய விதமான பழமொழிக்கு பின்பும் நிறைய கதைகள் உள்ளது.

Pothunalam.com பதிவில் நிறைய பழமொழிக்கான அர்த்தம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதனை தொடந்து இன்று நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை என்பதற்கான உண்மையான அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Kavari Maan Parambarai Meaning in Tamil:

கவரி மான் பரம்பரை என்று சொல்ல கேட்டிருப்போம். இதற்கு பின்னாடி பெரிய கதையே உள்ளது.

கவரிமான் பரம்பரை தெரியுமா ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விட்டு விடுவோம் என்பார்கள். இதற்கு ஒரு பொய்யான காரணமும் உள்ளது. கவரிமானிலிருந்து ஒரு முடி உதிர்தாலும் அது உயிரை விட்டுவிடும் என்பார்கள். அதேபோல் என்னுடைய வம்சத்திற்கு ஒரு இழுக்கு ஏற்பட்டாலும் உயிரை விடுவேன் என்பார்கள்.

ஆனால்  கவரி மான் என்று ஒரு இனமே கிடையாது அது ஒரு மாடு.  அப்பறம் எப்படி உயிரை விடுவார்கள் என்று சொல்வார்கள்.

அதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு கவரி மானுக்கும், சவரிமுடிக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளுங்கள். அது கவரிமான் கிடையாது கவரிமா.

இந்த மாதிரியான மாடு குளிர்பிதேசத்தில் வாழகூடியது. இதன் உடல் முழுவதும் முடி சூழ்ந்திருக்கும். இதனை சங்க இலக்கியங்களில் கவரி என்றும் திருக்குறளில் கவரிமா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

 இதனுடைய முடியை தான் பெண்கள் தங்களுடைய தலை முடியாக பயன்படுத்தி வந்தார்கள். அதனை தான் சங்க இலக்கியங்களில் உள்ள பதிற்றுப்பத்தில் கவரி முச்சிக் கார்விரி கூந்தல் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கவரி என்ற வார்த்தை தான் பின்பு சவரி என்று  சொல்ல ஆரம்பம் ஆனது. 

அதேபோல் திருக்குறளில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவிட்டா உயிரை விட்டுவிடும் என்று பொதுவாக தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.  கவரிமான் குளிர்பிரதேசத்தில் வாழ்வதால் அதனுடைய முடி உதிர்ந்தால் குளிர் தாங்காமல் அது இறந்துவிடும் அதனால் இப்படி சொன்னார்கள். அதற்கான அர்த்தம் காலப்போக்கில் மாறிவிட்டது.  

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 “கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு” பழமொழியின் உண்மை காரணம்..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement