கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

koolanalum kulithu kudi in tamil

Koolanalum Kulithu Kudi Kandhai Aanalum Kasaki Kattu Vilakkam

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு வகையான அர்த்தம் நிறைந்து இருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் பற்றி நமக்கு இதுநாள் வரையிலும் தெரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் நாம் பேச்சு வழக்கில் சொல்லும் பழமொழிக்கும் கூட தனி அர்த்தம் இருக்கிறது. நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் ஒரு வகையான விளக்கத்தினை மையப்படுத்தி தான் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நமது பதிவில் கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான விளக்கம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு பழமொழிக்கான விளக்கம்:

நாம் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக சுத்தமாக இருப்பதும் முக்கியமான ஒன்று. ஆனால் அத்தகைய ஆரோக்கியத்தை சரியான முறையில் வைத்திருப்பது நம்முடைய நடைமுறை மற்றும் செயலிகளில் தான் இருக்கிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் இதனை மையமாக கொண்டு நம் முன்னோர்கள் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்ற பழமொழியினை அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள்.

ஆனால் நாம் ஏதோ ஒரு பழமொழியினை கூறுகிறார்கள் என்று தான் நினைப்போமே தவிர அதற்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பது இல்லை. ஆகாயல் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்ற பழமொழிக்கான விளக்கம் என்னவென்றால்..?

“நாங்க எல்லாம் கவரிமான் பரம்பரை” இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அத்தகைய உணவு இல்லை என்றால் நாம் உயிருடனும் வாழ முடியாது மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியாது.

 அப்படி நாம் சாப்பிடுவதற்கு தேவையான உணவு கிடைத்து விட்டால் உடனே அதனை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் தினமும் உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நமது உடல் மற்றும் உடையினை சுத்தமாக வைத்து கொள்வதும் சிறந்தது. அதனால் சாப்பிடுவதற்கு வெறும் கூழ் மட்டும் கிடைத்தாலும் கூட அதனை குளித்த பிறகு தான் குடிக்க வேண்டும் என்றும் நமக்கு உடுத்தி கொள்வதற்கு பெரிய பட்டால் ஆனா துணி கிடைத்தாலும் கூட அதனை சுத்தமாக துவைத்து தான் உடுத்த வேண்டும் என்ற விளக்கத்தினை நம் முன்னோர்கள் கூழானாலும் குளித்து குடி கந்தை ஆனாலும் கசக்கி கட்டு என்று பழமொழியின் மூலமாக கூறியிருக்கிறார்கள்.  
கழுதை கெட்ட குட்டி சுவர் என்று திட்டுவதற்கான அர்த்தம் என்ன.?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil