குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்? | Kurukkangal Vagaigal

Kurukkangal Vagaigal

குறுக்கம் எத்தனை வகைப்படும் அவை யாவை? | Kurukkam Ethanai Vagai

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குறுக்கங்கள் எத்தனை வகைப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழ் பாடங்களில் கட்டாயம் தேர்வில்  துணைப்பாடம், செய்யுள் சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும், அதிலும் குறிப்பாக இலக்கணம் வந்துவிடும். இலக்கணம் பார்ப்பதற்கு சற்று கடினமாக இருக்கும் ஆனால் படித்தால் எளிதில் புரிந்துவிடும், மேலும் தேர்வில் சுலபமாக மதிப்பெண்களை பெற்று விட முடியும். சரி வாங்க மாணவர்களுக்கு பயன்படும் குறுக்கங்கள் பற்றி இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம்.

குறுக்கங்கள் என்றால் என்ன?

  • Kurukkam Endral Enna: இலக்கணத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு இருக்கும் அதை மாத்திரை என்பர்.
  • ஓர் எழுத்து தனக்கு உரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்க பெறுவது குறுக்கம் எனப்படும்.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

குறுக்கம் அதனுடைய மாத்திரை அளவை பொறுத்து மொத்தம் நான்கு வகைப்படும் அவை;

  1. ஐகாரக்குறுக்கம்
  2. ஒளகாரக்குறுக்கம்
  3. மகரக்குறுக்கம்
  4. ஆய்தக்குறுக்கம்

ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?

  • என்பது நெடில் எழுத்து. இது நெடில் என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
  • தனியாக இருக்கும் ஐகாரம் மட்டுமே இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
  • சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் ஐகாரம் இரண்டு மாத்திரை அளவில் குறைந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிப்பதால் இது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஐகாரக்குறுக்கம் சான்று:

  • ஐம்பது – இதில் ஐ சொல்லின் முதலில் வந்து ஒன்றரை மாத்திரை அளவு ஒலிக்கிறது.
  • தலைவன் – இதில் ஐ சொல்லின் இடையில் வந்து ஒரு மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கிறது.
  • கடலை – இதில் ஐ சொல்லின் இறுதியில் வந்து ஒரு மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கிறது.

ஔகாரக் குறுக்கம் என்றால் என்ன?

  • ஒள நெடில் எழுத்து என்பதால் இதனுடைய மாத்திரை அளவு இரண்டு. ஒளகாரக்குறுக்கத்தின் மாத்திரை அளவு ஒன்றரை.
  • இந்த குறுக்கம் சொல்லுக்கு முதலில் வரும் போது குறைந்து ஒலிக்கும். ஒளகாரம் சொல்லின் இடையில் மற்றும் இறுதியில் வருவதில்லை.

உதாரணம்:

  • ஒளவை, வௌவால், மௌவல்

மகரக் குறுக்கம் என்றால் என்ன?

இந்த வகை குறுக்கத்தில் ம் எனும் மெய் எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது மகர குறுக்கம் எனப்படும். இது இரண்டு இடத்தில் குறைந்து ஒலிக்கும் அவை

  1. தனிமொழி
  2. புணர்மொழி

தனிமொழி:

மெய்யெழுத்துகளில் ன், ண் ஆகிய இரண்டு எழுத்துக்களை அடுத்து வரும் மகர ஒற்று குறைந்து ஒலிக்கும்.

(எ.கா) போன்ம், காண்ம்

புணர்மொழி:

இரண்டு சொற்களில், முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.

(எ.கா) தரும் வளவன், வரும் வண்டி

ஆய்தக் குறுக்கம் என்றால் என்ன?

  • இந்த வகை குறுக்கத்தில் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
  • இரண்டு சொற்கள் சேரும்பொழுது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் மெய் எழுத்துக்கள், இரண்டாம் சொல்லின் தகரத்தோடு சேரும் போது ஆய்தம் திரிந்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

உதாரணம்:

  • கல் + தீது = கஃறீது
  • அல் + திணை = அஃறிணை
சார்பெழுத்துகள் என்றால் என்ன?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil