நம்மை பற்றி யோசிக்கும் நபர்கள்..! – Law of Attraction
நாம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போ தான் நாம் அடுத்த காலகட்டத்திற்கு தயார் செய்து கொள்ள முடியும். அதுவும் சரி தான்.. சரி வாங்க இன்றை பயனுள்ள தகவல் என்னவென்றால் நாம் தினமும் நிறைய நபர்களிடம் பேசுவது வழக்கம். பேசாமலும் யாரும் இருக்க முடியாது. அதேபோல் சில நேரங்களில் பேசிக்கொண்டு இருக்கும் போதே நாம் நேசிக்கும் ஒருவரை அல்லது வேறு ஒருவரை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவோம் அதற்கு என்ன காரணம் தெரியுமா? வாங்க இதுபோல் நிறைய பயனுள்ள தகவலை தெரிந்துக்கொள்ளவோம்..!
உங்களை ஒருவர் நினைத்தால் நம்மில் ஏற்படும் அறிகுறி என்ன தெரியுமா?
Law of Attraction – ஒருவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பீர்கள். அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்டால். உங்களை அவர்கள் நினைத்தால் நீங்கள் எதோ ஒரு முக்கியமான வேலை செய்திகொண்டு இருந்தீர்கள் என்றால் அல்லது நிறைய பேசிக்கொண்டு இருப்பீர்கள் அப்போது நீங்கள் என்ன பேச நினைத்தீர்களோ அது அனைத்துமே மறந்துவிடுவீர்கள். அந்த நேரத்தில் மிகவும் அமைதியாக இருப்பீர்கள் அதற்கு பிறகு தான் வேலை பார்க்க தொடங்குவீர்கள். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கூட மறந்து விடுவீர்கள்.
இது எப்படி நடக்கிறது என்றால் உங்களை நினைத்த நபர்கள் வேற எந்த ஒரு விஷயத்தையும் பற்றி யோசிக்காமல் உங்களை மட்டும் யோசிப்பார்கள். அப்போது அவர்களுக்கு என்று ஒரு அலை வரிசை இருக்கும். உங்களுக்கென்று ஒரு அலை வரிசை இருக்கும். இந்த இரண்டு அலை வரிசையும் ஒன்று சேரும் போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து அவர்களை பற்றி நீங்களும் யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
அவர்கள் கொஞ்சம் அதிகமாக நினைக்க ஆரம்பிக்கும் போது நீங்களும் அவர்களை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
நீங்கள் உங்களுடைய நண்பனும் பேசிக்கொண்டு இருக்கும் போது விரைவாக எதோ பேச்சுக்கொண்டு இருப்பீர்கள் அப்போது வேறு ஒருவரை பற்றி உங்கள் நண்பனுக்கு சொல்வீர்கள். இதற்கு காரணம் நாம் அதிகளவு அவர்கள் மீது அன்பு வைத்திருப்போம். அது அப்படியே மாறி அவர்கள் தான் நம்முடைய வாழ்க்கை என்று முடிவு செய்து விடுவீர்கள். இது நம் மனதில் இருக்கும் ஆன்ம சக்தி செய்கிறது என்று சொல்கிறார்கள்.
இப்போது ஒருவர் உங்களை நினைத்து மிகவும் வருத்தம் அடைகிறார்கள், அவர்கள் உங்களை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள் என்றால். அந்த உணர்வை உங்கள் கண்களில் உணர முடியும். உங்கள் கண்களில் ஒரு எரிச்சல் உண்டாகும் அதேபோல் கண்களில் தண்ணீர் வரும் சம்பந்தம் இல்லாமல் கண்களில் தண்ணீர் வருகிறது என்று யோசிப்பீர்கள் அதற்கு காரணம் அவர்கள் உங்களை நினைத்து அவர்களுடைய எண்ணத்தின் வலிகள் உங்கள் கண்களில் கண்ணீராக வரும் என்று சொல்கிறார்கள்.
எப்போதாவது உங்களை அவர்கள் நினைத்தால் உங்கள் உடல் ஜில் என்று மாறிவிடும் இதற்கு காரணம் அவர்கள் நீங்கள் பக்கத்தில் இருப்பதை போல் நினைத்துகொள்கிறார்கள். ஆகையால் அவர்கள் நினைக்கும் போது அவர்களில் ஆன்ம உங்கள் பக்கத்தில் இருக்குமாம் அதனால் உங்களை உடல் ஜில் என்று மாறி விடும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |