பல்லி கனவில் வந்தால் என்ன பலன் | Palli Kanavil Vanthal Enna Palan

Palli Kanavil Vanthal Enna Palan

பல்லி கனவில் வந்தால் என்ன அர்த்தம் | Lizard Kanavu Palangal in Tamil

Kanavil Palli Vilum Palangal / கனவில் பல்லி விழுந்தால் என்ன பலன்: நம்முடைய கனவில் பல்லிகள் வருவது நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே வெளிப்படுத்திகிறது என்று இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது. கனவில் பல்லியை கண்டால் பதற்றமான சூழ்நிலை உருவாக போகிறது என்று கனவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். கனவுகளானது அனைவருக்கும் ஒரே மாதிரியாக வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் கனவானது மாறுபட்டு வெவ்வேறு பலன்களை கொடுக்கும். அந்த வகையில் பல்லியை கனவில் கண்டால் என்ன பலன் (palli kanavil vanthal) என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

சுவரில் பல்லி ஊர்ந்து செல்வது போல் கண்டால் என்ன பலன்:

வீட்டு சுவற்றின் மீது பல்லி ஊர்ந்து செல்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க போகிறது என்று அர்த்தம். தொழிலில் நஷ்டம் நீங்கி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

சுவரில் இருந்து பல்லி கீழே விழுவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் பல்லி சுவரில் இருந்து கீழே விழுவது போன்று கண்டால் உங்களுக்கு ஏதோ சிறிய விபத்துகள் ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.

இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போன்று வந்தால் அன்றைய நாளில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படக்கூடும் என்பது இந்த கனவின் அறிகுறியாகும்.

வீட்டில் பல்லி சத்தமிட்டால் நல்லதா? கெட்டதா?

பல்லி உங்களை தாக்குவது போன்று கனவில் கண்டால் என்ன பலன்:

lizard kanavu palangal in tamil: உங்களுடைய கனவில் பெரிய பல்லி ஒன்று உங்களை தாக்குவது போன்று வந்தால் உங்களுக்கு மிகவும் நெருங்கியவர் நீங்கள் செய்யும் நல்ல செயல்களை செய்ய விடாமல் அதனை தடுத்து நிறுத்த முயற்சி செய்வார்கள்.

பல்லி முட்டையிலிருந்து வெளிவருவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் பல்லி முட்டை வெளிவருவது போன்று வந்தால் நீங்கள் கூடிய சீக்கிரம் புதிய காரியத்தினை செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். அதிலிருந்து உங்களுடைய வாழ்க்கையானது சிறப்பாக இருக்கும்.

பல்லி அதன் வாலை தானாகவே துண்டாக்கி கொள்வது போன்று கனவில் கண்டால் என்ன பலன்:

கனவில் பல்லி அதனுடைய வாலை தானாகவே துண்டாக்கி கொள்வது போன்று வந்தால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்வீர்கள் என்று அர்த்தம். 

பல்லி ஒளிந்துக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் பல்லி ஒளிந்துக்கொள்வது போல கண்டால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நீங்கள் உங்களுடைய விவேகத்தால் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதை குறிக்கிறது.

பல்லியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் பல்லியை நீங்கள் சாப்பிடுவது போல் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய நல்ல எதிர்காலத்தினை பற்றி இந்த கனவானது கூறுகிறது. நீங்கள் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

பெரிய பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்:

கனவில் பெரிய பல்லியை நீங்கள் கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் ஒருவரை சந்திப்பதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று இந்த கனவு நமக்கு உணர்த்துகிறது.

ஒளிந்து இருக்கும் பல்லியை நீங்கள் கனவில் கண்டால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் மறைந்திருக்கும் பல்லியை கண்டால் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து அதன் மூலமாக மிகப்பெரிய அளவில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். 

கனவில் பல்லியை கொள்ளுவது போன்று வந்தால் என்ன பலன்:

பல்லியை கனவில் கொள்ளுவது போன்று கண்டால் நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை பிரிய போகிறீர்கள் என்று அர்த்தம்.

பச்சை நிறம் பல்லி கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் பச்சை நிறத்தில் உள்ள பல்லியை கண்டால் விரைவில் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில சறுக்கல்கள் ஏற்படும், ஆனால் அதிலிருந்து விடுபடுவீர்கள் என்பதையும் குறிக்கிறது.

அழகான பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்:

கனவில் அழகான பல்லியை கண்டால் வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து சவால்களையும் எளிமையாக கடந்து வருவீர்கள் என்று குறிக்கிறது.

பல்லி கனவில் கடிப்பது போன்று வந்தால் என்ன பலன்:

கனவில் உங்களை பல்லி கடிப்பது போன்று வந்தால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியத்தோடு இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. ஏதோ சிறிய விபத்துகள் ஏற்பட்டு உங்கள் உடலில் காயம் ஏற்பட போகிறது என்பதை இது குறிக்கிறது.

கனவில் பல்லியை பிடிப்பது போன்று வந்தால் என்ன பலன்:

உங்களுடைய ஆழ்ந்த கனவில் பல்லியை பிடிப்பது போன்று வந்தால் உங்கள் காதல் வாழ்க்கையில் வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் பல்லியை கையில் பிடிக்கும்போது அதை தவற விடுவது போல் கண்டால் நீங்கள் நேசிப்பவரை திருமணம் செய்வதில் நிறைய தடங்கல் வரப்போகிறது என்று அர்த்தம்.

பல்லி வலது பக்கமாக சுவரில் மேலே பார்த்து செல்வது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

சுவரில் பல்லி வலது பக்கமாக மேலே பார்த்து ஊர்வது போல கனவில் வந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் தோல்வி இல்லாமல் மிகப்பெரிய அளவில் அடைய போகிறீர்கள் என்று இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil