மலைபடுகடாம் நூல் குறிப்பு பற்றிய தகவல்கள்..!

மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பு

 Malaipadukadam Nool Kurippu in tamil

வணக்கம் நண்பர்களே… நம் சங்க கால தமிழ் இலக்ககியத்தில் எத்தனையோ நூல்கள் உள்ளன. அதில் பத்துப்பாட்டு நூல்களில் மலைப்படுகடாம் நூல் இடம்பெற்றுள்ளது. இன்று  நம் பதிவில் மலைபடுகடாம் நூல் பற்றிய தகவல்களை தான் பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ ஐந்திணை ஐம்பது மற்றும் ஐந்திணை எழுபது நூல்கள் 

மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பு:

இந்நூலை பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இந்த நூலுக்கு கூத்தாற்றுப்படை என்னும் வேறு பெயரும் உண்டு. மலைபடுகடாம் ஆசிரியப்பா பாவகையை கொண்டுள்ளது.

மலைபடுகடாம் நூல் குறிப்பு:

இந்நூல் சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஓன்று. இந்த தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் மலைபடுகடாம் என்று கூறப்படுகிறது. ஆற்றுப்படை நூல்களுள் மிகவும் பெரிய நூல் மலைபடுகடாம் என்றும் கூறப்படுகிறது. மலைபடுகடாம் ஒரு புறப்பொருள் நூல் என்று கூறப்படுகிறது.

கூத்தரைக் கலம் பெறு கண்ணுளர் என குறிப்பிடப்படும் பத்துப்பாட்டு நூல் ஆகும்.  மலைபடுகடாம் 583 அடிகளால் ஆனது. இந்நூலை பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இந்த நூலுக்கு கூத்தாற்றுப்படை என்னும் வேறு பெயரும் உண்டு. மலைபடுகடாம் ஆசிரியப்பா பாவகையை கொண்டுள்ளது.

மலைபடுகடாம் பாடல்கள் பாடாண் திணையில் இடம்பெறுகிறது. மலைபடுகடாம் நூலில் இடம்பெற்றுள்ள பாட்டுடை தலைவனின் வேறு பெயர் நவிரமலை வேந்தன் ஆகும்.

இந்நூல் பண்டைய கால இசைக்கருவிகள் குறித்து பாடப்பட்ட நூல் என்று கூறப்படுகிறது. இந்நூல் சிவபெருமானை “காரி உண்டிக் கடவுள்” என குறிப்பிடும் பத்துப்பாட்டு நூல் ஆகும். “சிவபெருமான் நஞ்சு உண்ட காரணத்தினால் காரி உண்டிக் கடவுள் சிவபெருமான்” என இந்நூலில் கூறப்படுகிறது.

இந்நூல் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேன் நன்னன்சேய் நன்னன் என்பவரை பாட்டுடைத்தலைவனாக கொண்ட பத்துப்பாட்டு நூல் ஆகும். இந்நூல் “மலைக்கு யானையை உவமையாக கொண்டு, மலையில் உண்டாகும் ஓசைகளை கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் மலைபடுகடாம்” எனப் பெயர்பெற்றது.

இந்நூலில் அருமையான  இசைக்கருவிகளை பற்றி விளக்கப்பட்டுள்ளன.  இந்நூலில் இடம்பெற்றுள்ள கருவிகள் “ஆகுளி, பாண்டில், கோடு, களிற்றுயிர்த் தூம்பு,  குழல், தட்டை, எல்லரி, பதலை” முதலியன ஆகும்.

இந்நூலின் சிறந்த பகுதிகளாக மலைச்சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றியும், குறவர்கள் நன்னனை காண்பதற்காக கொண்டு சென்ற கையுறை பொருட்கள் பற்றியும் பாடப்பட்டுள்ளன.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil