மரத்தினால் செய்யப்பட்ட வீட்டு பொருட்கள்
மரம் இல்லாத பொருள் இப்போது இல்லை. வீட்டில் இருக்கக்கூடிய கட்டில், பீரோ, நாற்காலி, பள்ளிகளில் இருக்கக்கூடிய மேசைகள் போன்ற பல பொருள்களும் மரத்தினால் ஆனவை தான். மரமானது நமக்கு பல வகையிலும் நன்மையை அளிக்கக்கூடியது தான். மரம் வளர்ப்பதினால் நமக்கு இயற்கையான காற்று, நிழல், வீட்டு உபயோகத்திற்கான பொருள்களை செய்வதற்கு மரம் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் ஒவ்வொரு மரத்தில் எந்தெந்த பொருள்களை செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம்.
மரங்கள் மற்றும் அதன் பயன்கள்..! |
ஷீஷாம் மரம்:
ஷீஷாம் மரமானது உள்நாட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மரமாகும். இந்த மரத்தினை ரோஸ்வுட் என்றும் அழைக்கிறார்கள். இது பலவகைகளில் நன்றாக வேலை செய்யும் திறன் காரணமாக படுக்கையறைகளுக்கான தளபாடங்களில் மிகவும் பிரபலமானது. இந்த மரத்தால் செய்த பொருள்கள் அனைத்தும் கரையான்கள் அரிக்காமல் பாதுகாக்கும். மேலும், ஷீஷாமுடன் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தளபாடமும் அதன் தனித்துவமான அடையாளங்களுடன் இருக்கிறது.
தேக்கு மரம்:
தேக்கு மரமானது வெயிலினுடைய ஒளி தன்மையை அதிகம் விரும்புவதால் தமிழ்நாட்டில் இந்த மரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. தேக்கு மரத்தின் உயர அளவானது 30 முதல் 40 மீட்டர் உயரம் வரை இருக்கும். தேக்கானது மர வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தேக்கு மரத்தால் கட்டில், வீட்டு கதவுகள் மற்றும் பீரோக்கள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஈரப்பதம் மற்றும் வானிலைக்கு பெரிதும் ஆதரவாக இருக்கிறது.
சிடார் மரம்:
சிடார் மர வகைகளில் தியோடர் சிடார், அட்லஸ் சிடார் மற்றும் லெபனானின் சிடார் போன்ற மூன்று சிடார் வகைகள் உள்ளன. இந்த சிடார் மரத்தில் வெளிப்புறத்தில் வைக்கும் மரச்சாமான்கள் மற்றும் அலமாரிகளுக்கு இந்த மரம் பயன்படுகிறது. இந்த மரமானது மிகவும் விலை கம்மிதான். இந்த மரம் பூச்சிகளை விரட்டும் தன்மை பெற்றுள்ளது. நல்ல வலிமைமிக்க மரமாக இருப்பதால் வீட்டு அலமாரி பொருள்கள் வைப்பதற்கு இந்த மரம் உபயோகமாக உள்ளது.
இந்தியாவின் தேசிய மரம் எது? |
சால் மரம்:
அதிக வலிமையும், கடின தன்மைக்கும் நல்ல பெயர் பெற்றது சால் மரம். கட்டட அமைப்புகளுக்கு இந்த மரம் மிகவும் சிறந்து விளங்குகிறது. இந்த மரத்தினை தான் தண்டவாளத்திற்கு அடிக்கட்டைகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தினை கொண்டு தான் வீட்டு ஜன்னல், கதவுகள் மற்றும் பிரேம்கள் செய்வதற்கு பயன்படுகிறது. இந்தியாவில் உள்ள மலைப்பகுதிகளில் வளருவதால் இந்த மரத்தை குங்கிலிய மரம் என்றும் அழைப்பார்கள்.
ஓக் மரம்:
ஓக் மரமானது அதிகமாக இங்கிலாந்து நாட்டில் ஹாம்சயர் பகுதியில் அதிகமாக விளையக்கூடிய மரமாகும். இந்த மரம் உலகெங்கும் உள்ள மர சாமான்கள் பொருள்கள் செய்ய பிரபலமாக உள்ளது. இந்த மரத்தினை தமிழில் சிந்தூர மரம் என்று அழைக்கிறார்கள்.
மஹோகனி மரம்:
இந்த மஹோகனி மரமானது ஐம்பது அடிக்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த மரத்தினை நட்ட பத்து வருடம் முதல் அறுவடை செய்யலாம். இந்த மரத்தினால் வீட்டிற்கு நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். மேலும் கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்ய மிகவும் பயன்படுகிறது. மரம் வளர்ப்பில் உள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் மஹோகனி மரம் உள்ளது.
இந்தியாவின் தேசிய மரம் எது? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |