இந்தியாவின் தேசிய மரம் எது? | National Tree Of India in Tamil

National Tree Of India in Tamil

இந்திய தேசிய மரம் எது?

National Tree Of India in Tamil: நமது இந்திய நாட்டின் தேசிய மரமாக திகழ்வது ஆலமரம். ஆலமரமானது மிக உயர்ந்த நிலையில் வளரக்கூடிய மர வகையை சேர்ந்தது. நாட்டின் தேசிய மரமான ஆலமரத்தினை சாலையின் ஒர பகுதிகளில், கோவில் வளாகங்களில் போன்ற பல இடத்தில் காணலாம். குறிப்பாக சில ஊர்களில் அந்த ஊரின் தலைவர் முன்னாள் ஆலமரத்தின் நிழலில் பஞ்சாயத்து நடப்பது வழக்கமாக இருக்கும். ஆலமரமானது தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் பெற்ற மரமாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆலமரத்தினை வேறு பெயரால் போதி மரம் என்று புத்த மதத்தினரால் புகழ்பெற்று அழைக்கப்பட்டது. இந்த பதிவில் தேசிய மரமான ஆலமரத்தின் சிறப்புகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

ஆலமரத்தின் சிறப்புகள்:

நாட்டின் தேசிய மரமான ஆலமரம் அத்திக் குடும்பத்தை சேர்ந்தவை. ஆலமரத்தின் உயரம் 20-35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம். மரத்தின் சுற்றளவு 15 மீட்டரும், அதற்கு மேலேயும் இருக்கலாம். மரத்தினுடைய கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்பதால் இதனை நாட்டின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆலமரத்தின் அடிமரம் அழிந்துவிட்டாலும் அதனை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மரத்தின் விழுதுகளுக்கு உள்ளன.

பல உயிர்கள் வாழ்வதற்கு இடம் தரும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். ஒரு ஆலமரம் பல காடுகளுக்கு சமம் போன்று காட்சியளிக்கும். ஆலமரத்தின் காய்க்கும் பழத்தினை மனிதர்கள் உணவாக உட்கொள்வதில்லை. ஆனால் ஆலமரத்தின் இலைகளை ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றன.

பல நாட்டு மருத்துவங்களிலும், சித்த மருத்துவத்திலும் ஆலமரத்தின் பட்டைகள் பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆலமரத்தில் இருந்து வரும் பால் நம்முடைய கையை வைத்து பார்த்தால் ஒட்டும் தன்மை கொண்டதாய் இருக்கும். இது படிக்கும் மாணவர்களுக்கு இரேசராகவும் பயன்படுகிறது.

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்

பல நோய்களை குணமாக்கும்:

நெடுநாட்களாக நீரழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஆலமரத்தின் பட்டைகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பற்களில் ஏற்படும் ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை ஆலமரத்தின் விழுதுகள் சரி செய்துவிடும்.

ஆலமரத்தின் பயன்கள்:

ஆலமரத்தின் விழுதுகளின் நுனிப்பகுதியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்க அனைவரும் பயன்படுத்தி வந்தனர். மரத்தின் கட்டைகளை பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய தீவு எது?

உலகின் மிகப்பெரிய ஆலமரம்:

அமெரிக்கா நாட்டினரும் இந்திய நாட்டிலிருந்து ஆலமர கன்றுகளை எடுத்துச் சென்று நட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தா மாநிலத்தில் அமைந்துள்ளது.

கொல்கத்தா மாநிலத்தின் அருகில் உள்ள கௌரா என்ற இடத்தில் ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் உலகின் மிகப் பெரிய ஆலமரம் உள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் வெளியான சுற்றுலா புத்தகங்களில் ஆலமரம் பற்றிய சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஆலமரத்தின் சதுர மீட்டரானது 14500 பரப்பளவில் படர்ந்துள்ளது. அதாவது 4 ஏக்கர் நிலப்பரப்பு அளவினை உடையது. மரத்தின் இலை ½ கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ளது. மரத்தின் உயரமான கிளை 25 மீட்டர் உயரம் வரை உள்ளது. தற்போது 3300 விழுதுகள் மூலம் ஆலமரம் விரிந்து, பெரிய காடுபோல காட்சிஅளிக்கிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil