ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

Advertisement

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது? | Miga Periya Kovil Gopuram

Miga Periya Kovil Gopuram:- ஆசியா இந்த உலகின் மிக பெரிய கண்டமாகும். மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60% பேர் வாழ்கின்றனர். 20-ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது. சரி இந்த பதிவில் பொது அறிவு (GK in Tamil) சார்ந்த வினா விடைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம் அந்த அடிப்படியில் ஆசியாவின் மிக உயரமான கோபுரம் ஏது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் என்று அழைக்கப்படுவது இந்தியாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் ஆகும். இந்த ஆலயத்தில் மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன. மேலும் இக்கோவிலின் ராஜகோபுரம் 239.501 அடி உயரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக அழைக்கப்படுகிறது. சரி இதனை தொடர்ந்து டாப் 10 வரிசையில் இந்தியாவின் மிக உயரமான கோபுரம் எது? என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகப்பெரிய தீவு எது?


டாப் டென் வரிசையில் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் கோபுரம் எது?

1. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில்

  • உயரம் (அடி) – 239.501
  • இடம் – ஸ்ரீரங்கம், தமிழ்நாடு, இந்தியா

2. முருதேஸ்வரா கோயில்

  • உயரம் (அடி) – 237.5
  • இடம் – முருதேஸ்வர், கர்நாடகா, இந்தியா

3. அண்ணாமலையார் கோயில்

  • உயரம் (அடி) – 216.5
  • இடம் – திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா

4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

  • உயரம் (அடி) – 193.5
  • இடம் – ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு, இந்தியா

5. உலகளந்த பெருமாள் கோயில்

  • உயரம் (அடி) – 192
  • இடம் – திருகோவிலூர், தமிழ்நாடு, இந்தியா

6. ஏகாம்பரேஸ்வரர் கோயில்

  • உயரம் (அடி) – 190
  • இடம் – காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா

7. அழகர் கோவில்

  • உயரம் (அடி) – 187
  • இடம் – மதுரை, தமிழ்நாடு, இந்தியா

8. மீனாட்சி அம்மன் கோயில்

  • உயரம் (அடி) – 170
  • இடம் – மதுரை, தமிழ்நாடு, இந்தியா

9. சாரங்கபாணி கோயில்

  • உயரம் (அடி) – 164
  • இடம் – கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா

10. ராஜகோபாலசாமி கோயில்

  • உயரம் (அடி) – 154
  • இடம் – மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா
இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement