இந்தியாவில் மிகவும் பிரபலமான 10 உணவு வகைகளின் பெயர்கள்..!

Advertisement

Most Popular Food in India

பொதுவாக மனிதர்கள் அனைவரும் உழைப்பதற்கான முக்கிய காரணங்களில் சாப்பாடும் ஒன்று. அதுமட்டும் இல்லாமல் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டை விட சிலருக்கு ஹோட்டல் சாப்பாடு தான் மிகவும் பிடிக்கும். அத்தகைய சாப்பாட்டில் சொல்ல முடியாத வகைகள் இருக்கின்றன. சாப்பாட்டில் எத்தனை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் மிகவும் பிரபலமான 10 உணவுகளின் பெயர்களை பற்றி இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். சரி வாங்க அப்படி என்ன தான் இந்தியாவில் பிரபலமான உணவுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சமோசா:

சமோசா

சமோசா இந்தியாவில் ரயில் நிலையம், டீ கடை, பேருந்து நிலையம் போன்ற பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல சமோசாவிற்கு என்று தனியாக கடைகளும் இருக்கிறது. இந்த சமோசாவின் உள்ளே இருக்கும் மசாலா மற்றும் அதன் மேல் உள்ள பொன் நிறமான வறுவல் இந்த இரண்டும் ஒருவரை மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கு தூண்டுகிறது.

தந்தூரி சிக்கன்:

தந்தூரி சிக்கன்

சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும் வகையில் இருப்பது தந்தூரி சிக்கன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக தந்தூரி சிக்கன் இருக்கிறது. இந்த தந்தூரி சிக்கனில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாக்களும் மற்றும் அதனுடைய சுவையும் அனைவரையும் சாப்பிட வைக்கிறது. ஆகவே இந்தியாவில் பிரபலமான உணவு வகைகளில் தந்தூரி சிக்கனும் ஒன்று.

பிரியாணி:

பிரியாணியை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இது சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்து ஹோட்டலிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிரியாணி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரிசிகளில் இருந்து சமைக்கப்படுகிறது. அதுபோல பிரியாணி சைவம் மற்றும் அசைவம் என இரண்டு பிரிவுகளில் பல வகைகள் இருக்கிறது.

சூப்:

சூப்

இந்தியாவில் சூப் பிரியர்கள் என்று நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தியாவில் சூப் மிகவும் பிரபலமானது. மேலும் சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப், தக்காளி சூப் இதுபோன்ற நிறைய சூப் வகைகள் இருக்கிறது. சூப்பிற்கு என்று பிரபலமான கடைகளும் இந்தியாவில் காணப்படுகிறது.

மீன் தந்தூரி:

மீன் தந்தூரி

மீன் தந்தூரி பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை என்றாலும் இது இந்தியாவில் அசைவ ஹோட்டலிகள் பிரபலமான உணவாக இருக்கிறது. அதனால் அசைவ ஹோட்டலுக்கு சென்றால் கண்டிப்பாக மீன் தந்தூரி சாப்பிட மறந்துவிடாதீர்கள். ஒரு முறை சாப்பிட்டால் மறக்கவே மாட்டீர்கள் அந்த அளவிற்கு சுவை அதிகமாக இருக்கும். இதுவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு ஆன்லைனில் விற்பனை செய்ய தேவைப்படும் 25 பொருட்கள் பட்டியல்..!

நாண்:

நாண்

நாண் மைதாமாவினால் செய்யப்பட்ட ஒரு உணவு ஆகும். இந்த நாணை கடைகளில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் செய்கின்றனர். நாண் சப்பாத்தி போன்ற நிறத்தில் இருக்கும். ஆனால் அதனுடைய சுவை முற்றிலும் வேறுபட்டு காணப்படும். இந்த நாண் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. ஆகவே இது இந்தியாவின் பிரபலமான உணவாகும்.

இஞ்சி சிக்கன் கபாப்:

இஞ்சி சிக்கன் கபாப்

சிக்கனில் செய்யப்பட்ட வறுவல், சிக்கன் 65 மற்றும் தந்தூரி போன்ற உணவுகளின் சுவையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது இஞ்சி சிக்கன் கபாப். இஞ்சி சிக்கன் கபாப் என்பது இஞ்சி, பூண்டு, புதினா மற்றும் சில சாஸ் வகைகள் அனைத்தும் சேர்த்து சிக்கனில் செய்யப்பட்டுள்ள உணவுகளில் மேல் ஊற்றினால் அதனுடைய சுவை முற்றிலும் வேறுபாடும். இந்த உணவிற்கு என்று தனி பெருமை இருக்கிறது.

புளியோதரை சாதம்:

புளியோதரை

 

புளியோதரை இந்தியாவிற்கு மிகவும் பெயர் போன உணவாக இருக்கிறது. எத்தனை உணவுகள் நீங்களும் சாப்பிட்டாலும் புளியோதரையின் சுவைக்கு ஈடாகாது. இந்த புளியோதரை விருப்பக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கின்றனர். கோவில்கள், வீடுகள் மற்றும் சுபகாரியங்களிழும் அதிகமாக சமைக்கப்படுகிறது.

மசால் தோசை:

மசால்தோசை

 

தோசை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் பிரபலமானது மசால் தோசை தான். இந்த மசாலா தோசையின் உள்ளே இருக்கும் தக்காளி, வெங்காயம் மற்றும் சில மசாலாக்கள் இவை அனைத்தும் மசாலா தோசையின் சுவையை உயர்த்துகிறது. இந்த மசாலா தோசை இந்திய உணவுகளில் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த உணவு.

மட்டன் கீமா:

கீமா

மட்டன் கீமா என்பது ஆட்டு இறைச்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு ஆகும். மசாலா பொருட்கள், தக்காளி, வெங்காயம் மற்றும் ஆட்டு இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனையும் சேர்த்து பொன் நிறமாக பொரித்து எடுக்கப்படும் உணவு. இந்த கீமா ஹோட்டல்களில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. எந்த ஹோட்டலிற்கு சென்றாலும் கண்டிப்பாக ஆட்டு கீமா சாப்பிட மறக்காதீர்கள். இது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு.

இதையும் படியுங்கள் ⇒  2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement