நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி?

Advertisement

நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி? Natham Purampokku Patta Vanguvathu Eppadi

Natham Purampokku Patta Vanguvathu Eppadi – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நீங்கள் கிராமத்தில் இருந்தாலும் சரி, புறநகர் பகுதியில் இருந்தாலும் சரி அல்லது நகரங்களில் இருந்தாலும் சரி நீங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கு அல்லது உங்கள் அனுபவத்தில் இருந்து வரும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எப்படி வீட்டுமனை பட்டா வாங்குவது, அதற்கான வழிமுறைகள் என்ன? அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? அந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும், எப்படி இந்த நத்தம் புறம்போக்கு இடத்தை இலவச வீட்டுமனை பட்டாவாக பெறுவது என்பது  குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.  அதன் வரிசையில் முதலில் நத்தம் என்றால் என்ன என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.

நத்தம் என்றால் என்ன?

நத்தம் நிலம் என்பது தமிழக வருவாய்த் துறை, கிராமப்புற நிலங்கள் தொடர்பான ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?

நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி? அதற்கான வழிமுறைகள் – Natham Purampokku Patta Vanguvathu Eppadi:natham purampokku patta vanguvathu eppadi

நத்தம் நிலவரத்தை கீழ் தமிழகம் முழுவதும், தமிழக அரசு நிலங்களை ஆய்வு செய்து, அளவீடு செய்து விவசாய நிலங்கள் அல்லாத மக்கள் குடியிருந்து வரும் குடியிருப்பு பகுதிகளை, ஏரிகள், குளங்கள், பொது பாதை, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கென பொது இடம், தனிநபர்கள் தங்களது அனுபவத்தில் இருந்து வரும் அந்த குடியிருப்பு பகுதிகள் என அனைத்தியுமே வரைபடம் தயாரித்து, அவர்களுக்கென்று நத்தம் பட்ட வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி நத்தம் நிலவரத்தை கீழ் தங்களது அனுபவத்தில் வைத்திருக்கும் அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு, நத்தம் பட்டா, நத்தம் குடியிருப்பு பட்டா, நத்தம் தோராய பட்டா மற்றும் நத்தம் தூய பட்டா வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் நத்தம் நிலவரத்தை கீழ் அளவீடு செய்யும்பொழுது அரசுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளை நத்தம் புறம்போக்காக வகைப்பாடு செய்து புல எண்களில் பதிவு செய்து வைத்திருந்தனர்.

அவ்வாறு நத்தம் புறம்போக்கு இடங்களில் சமீபகாலத்தில் நீங்கள் அனுபவம் செய்து வரும்பொழுது, அந்த இடத்தில் குடியிருப்புகளை கட்டி நீங்கள் வசித்து வரும்பொழுது, தமிழக அரசு அந்த இடத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிவருகிறது. அதன்படி நத்தம் என்றாலே பொது மக்கள் குடியிருப்பு என்பதும். அதுவே அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் நத்தம் புறம்போக்காக வகைப்படுத்தப்படும்.

அந்த நத்தம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பொது பாதைகள் இருக்கும், பொது மக்கள் பயன்படுத்தப்படும் பொது இடங்கள் மற்றும் கோயில் நிலங்கள் மற்றும் ஊராட்சிக்கு என்று தனியாக வகைப்படுத்தப்பட்ட இடங்கள் என அனைத்துமே இந்த நத்தம் நிலவர திட்டம் கீழ் வரைபடம் தயாரித்து மற்றும் நில அளவீடு செய்யப்பட்டிருக்கும்.

அதன்படி நீங்கள் கிராமங்களிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ அல்லது நகரங்களிலோ நீண்ட காலமாக நத்தம் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்து, அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் நீங்கள் நத்தம் பட்டா வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அந்த இடமானது உங்களுடைய முன்னோர்களின் பெயரில் ஏற்கனவே நத்தம் நிலவர திட்டத்தின் கீழ் அளவீடு செய்யும்பொழுது, உங்களுடைய முன்னோர்கள் பெயர் அந்த சம்பந்தப்பட்ட புல எண்ணில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், நீங்கள் உங்களுடைய வாரிசு சான்றிதழ், இதர ஆவணக்களை சமர்ப்பித்து, உங்களுடைய உங்களுடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் பெறமுடியும்.

ஒருவேளை உங்களுக்கு அந்த இடத்திற்கண் புல எண்கள் தெரியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட VAO அலுவலகத்திற்கு சென்று உங்கள் இடத்திற்கான புல எண்ணை தெரிந்துகொண்டு, அதன் பிறகு அந்த புல எண் யாருடைய பெயரில் இருக்கிறது, உங்கள் முன்னோர்கள் இருக்கிறதா அல்லது அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளாக இருக்கிறதா?, அல்லது ஏரி, குளம் என பொதுமக்கள் பயன்படுத்தப்படும் ஆட்சியப்பனைக்குறைய இடத்தில் இருக்கிறதா?, அல்லது வேறு ஒரு தனிநபர் பெயரில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகு வட்டாச்சியர் அவர்களுக்கு நத்தம் வீட்டுமனை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?

ஒருவேளை நீங்கள் குடியிருக்கு பகுதியானது ஆட்சியப்பனைக்குரிய பகுதியாக ஏரி, குளம் போன்றவற்றிக்கு அருகிலோ அல்லது வேறு ஏதேனும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நிலமாக நீங்கள் ஆக்கிரமித்து வசித்து வந்தால், அந்த இடத்திற்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கமாட்டார்கள், அது ஆட்சியப்பனையற்ற நத்தம் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். அல்லது உங்கள் முன்னோர்கள் ஏற்கனவே காலம் காலமாக குடியிருந்து வந்து நத்தம் பகுதியாக இருக்கும்பொழுது. அந்த இடத்திற்கு நாம் பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.

அதன் படி நத்தம் நிலவரத் திட்டத்தின் கீழ் நத்தம் வீட்டுமனை பட்டா வேண்டியோ, அல்லது நத்தம் இலவச வீடு மனை வேண்டியோ விண்ணப்பிக்கும்பொழுது. அந்த சம்பந்தப்பட்ட புல எண்ணானது, உங்களுடைய அனுபவத்தில் இருக்க வேண்டும்.

அல்லது உங்களுடைய முன்னோர்கள் அனுபவத்தில் இருந்து, தற்பொழுது உங்களுடைய அனுபவத்தில் இருந்திருக்க வேண்டும்.  அவ்வாறு இருக்கும்பொழுது உங்களுக்கு நத்தம் இலவச வீட்டுமனை பட்டா எளிதாக கிடைக்கும்.

நீங்கள் வீடு கட்டி குடியிருந்து வரும்பொழுது வீட்டு வரி ரசீது, எதனை ஆண்டுகாலம் வசித்து வருகிறீர்கள் என்பதற்கான அந்த வீட்டு வரி ரசீது மற்றும் அதற்கான மின்னிணைப்பு மற்றும் குடும்ப அட்டை மற்றும் இதர ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி அந்த வட்டாச்சியர் கோப்புகளை சம்பந்தப்பட்ட VAO அலுவலகத்திற்கு அனுப்பி அந்த இடமானது அரசுக்கு சொந்தமான இடமா, ஆட்சியபனைக்குரிய இடமா, பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு விடப்பட்ட நத்தம் புறம்போக்கு இடமா என உறுதி செய்யப்படும். ஒருவேளை அந்த இடம் ஆட்சியப்பனையற்ற நத்தம் புறம்போக்காகவோ, அல்லது உங்கள் முன்னோர்கள் குடியிருந்த அந்த நத்தம் பகுதியாக இருந்து வந்தால் அந்த இடத்திற்கு உங்களுக்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்குவார்கள்.

ஒருவேளை அந்த நத்தம் இடமானது வேறொரு தனிநபர் பெயரில் இருந்தாலோ அல்லது அந்த இடத்திற்கு இரண்டு நபர்கள் நத்தம் இலவச வீட்டுமனை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தாலோ மேற்படி அந்த இடத்திற்கு நத்தம் வீட்டுமனை பட்டா வழங்கமாட்டார்கள்.

ஒரே புல எண்ணிற்கு அல்லது சொத்திற்கு இரண்டுபேருமோ நத்தம் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்பொழுது அதை நீதிமன்றம் மூலமாக மட்டுமே முடிவு செய்து அந்த இடம் யாருடைய பெயரில் அனுபவத்தில் இருக்கிறது, யாருக்கு எந்த இடம் சொந்தமானது என்பதை உறுதி செய்து நத்தம் வீட்டுமனை பட்டா அதன் பிறகே வழங்குவார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி.?

அரசுக்கு சொந்தமான நத்தம் புரம்ப்பிக்கு பகுதிகளில் வசித்து வந்தால், அந்த இடத்திற்கும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு அரசாணை பிறப்பித்து அந்த அரசாணையின்படி கிராமங்களில் 3 சென்ட் அளவிற்கு நத்தம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், நகர்ப்புறங்களில் ஒரு சென்ட் அளவிற்கு நத்தம் இலவச பட்டா வழங்கவும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை பிறப்பித்து வருகிறது.

அதன்பிடி நீங்கள் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து நீங்கள் வீடுகட்டி உங்களுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும் நீங்கள் அந்த வீட்டிற்கான ரசீது, எவ்வளவு ஆண்டு காலம் அந்த வீட்டில் அல்லது அந்த இடத்தல் அனுபவம் செய்து வந்தீர்கள் மற்றும் அதற்கான மின்னிணைப்பு மற்றும் இதர ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் சம்பர்ப்பித்து இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு நீங்கள் ஒரு நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு இடத்திற்கு வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கும்பொழுது அந்த இடமானது ஆட்சியப்பனையற்ற நிலமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தை வருவாய் ஆய்வாளர் மட்டும் VAO ஆய்வுசெய்து, அந்த இடமானது பொது இடம் கிடையாது, நீர்நிலைக்கு அருகில் இல்லை, ஆட்சியப்பனையற்ற இடம், மேச்சல் புறம்போக்கு கிடையாது என அனைத்தையும் ஆயுவு செய்தபிறகு அவர்கள் ஒரு அறிக்கை சமர்ப்பித்து அதன்படி வட்டாச்சியர் நத்தம் வீட்டுமனை பட்டா வழங்குவார்கள். இவ்வாறு தான் நீங்கள் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வாங்க வேண்டும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement