நிச்சயதார்த்தத்திற்கு எத்தனை சீர்வரிசை பொருட்கள் இருக்கவேண்டும் தெரியுமா?

நிச்சய சீர்வரிசை பொருட்கள்

நிச்சய சீர்வரிசை பொருட்கள் பட்டியல்

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் நிச்சய சீர்வரிசை பொருட்கள் எவ்வளவு வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே எத்தனை பொருட்கள் வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். நிச்சயதார்த்தம் என்பது நம் அனைவரின் வீட்டிலும் நடக்கும் ஒரு சந்தோஷமான தருணம் என்றே கூறலாம். அனைவரின் வாழ்விலும் இது ஒரு இன்றியமையாத தருணம் ஆகும். அந்த வகையில் இன்று நம் பதிவில் நிச்சயத்திற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

நிச்சயதார்த்தம் என்றால் என்ன:

நிச்சயதார்த்தம் என்பது திருமணம் ஆவதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை நிச்சயதார்த்தம் என்று கூறுகிறோம். இதை திருமண உறுதி அல்லது நிச்சயத் தாம்பூலம் என்றும் கூறுகிறோம்.

இது போன்ற நிகழ்ச்சியில் சீர்வரிசை பொருட்கள் கட்டாயமாக வைப்பார்கள். அந்த வகையில் எத்தனை சீர்வரிசை பொருட்கள் வைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

திருமணத்திற்கு எவ்வளவு சீர்வரிசை பொருட்கள் இருக்க வேண்டும் தெரியுமா

நிச்சய சீர்வரிசை பொருட்கள்:

நிச்சயத்திற்கு சீர்வரிசை தட்டுகள் கொண்டுவரப்படுகின்றன. அதை அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு வரிசையில் அமைக்கபடுகின்றன. இதில் சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. சீர்வரிசை பொருட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு குடும்பங்களின் மனநிலையை பொறுத்து மாறுகிறது. சிலர் அதிகமாக சீர்வரிசை வைக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

  • முதலில் பழங்கள் கட்டாயமாக இருக்கும். பல வகையான வண்ண வண்ண பழங்கள் நிறைந்து இருக்கும். பழங்களை குறிப்பிட்ட தாம்பூலங்களில் வைத்திருக்க வேண்டும். பழங்கள் வாழ்க்கையில் வெற்றி மற்றும் நிறைவைக் குறிக்கிறது.
  • அதன் பின் இனிப்பு வகைகள் இருக்கும். பலவகையான இனிப்பு வகைகள் மற்றும் சுவை நிறைந்த பண்டங்கள் இருக்கும். இவற்றை குறிப்பிட்ட தாம்பூலங்களில் வைத்திருக்க வேண்டும். இது இனிமையான வாழ்க்கையை குறிக்கிறது.
  • மணமக்களின் ஆடைகள் ஒரு சீர் தட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • மணமகளுக்கு கொடுக்கும் அணிகலன்களை ஒரு சீர் தட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • ஒரு தாம்பூலத்தில் தேங்காய் மஞ்சள் தடவி வைத்திருக்க வேண்டும். அதன் பின் பூக்களை ஒரு சில தாம்பூலத்தில் வைத்திருக்க வேண்டும். ஒரு சில தாம்பூலங்களில் பூஜை பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.
  • வெற்றிலை மற்றும் பாக்கு போன்றவை ஒரு தாம்பூலத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com