பனைமரம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

palm tree in tamil

Palm Tree in Tamil

வணக்கம் நண்பர்களே..! மனிதர்கள் அனைவரும் பெரும்பாலும் என்னென்ன மரங்கள் இருக்கிறது மற்றும் அதனுடைய பெயர் என்ன என்பதை பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள். ஆனால் அந்த மரத்தை பற்றிய தகவல்கள் தெரியுமா என்று கேட்டால் அவ்வளவாக தெரியாது என்று தான் கூறுவார்கள். அத்தகைய மரங்களில் ஒன்றான பனை மரம் பற்றிய தகவல்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

பனைமரம் பற்றிய தகவல்:

பனைமரம் அறிவியல் பெயர் பேரரசு என்பது ஆகும். இந்த பனைமரம் தாவர பேரினம் என்ற இனத்தை சேர்ந்த ஒரு வகையான புல்லினம் ஆகும்.

பனை மரம் இயற்கையாவே தானாகவே வளரும் தன்மை கொண்டது. மற்ற செடி, கொடி, மரங்களை போல பராமரிக்க வேண்டியதில்லை.

பனை மரம் வளர ஆரம்பமாகும் காலத்தில் அதனை வடலி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் பனை மரம் வளர்ந்து முழு பருவம் அடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகும்.

இத்தகைய பனை மரத்தில் 20 மீட்டர் உயரம் 30 முதல் 40 வரையிலான விசிறி வடிவில் பச்சை நிற ஓலைகளும் இருக்கிறது.

அனைத்து மண் வளங்களிலும் வளர கூடிய சிறப்பு வாய்ந்தது.

ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது பனை மரம். அதன் பின்பு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா, இலங்கை, இந்தினோசியா, மலேசியா, ஆசியா, கொங்கை, சீனா ஆகிய நாடுகளில் அதிகமாக இப்போது காணப்படுகிறது.

பனை மரத்தின் வகைகள்:

பனை மரம் 34 வகைகளாக காணப்படுகிறது. அவற்றின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. ஆண் பனை
  2. பெண் பனை 
  3. கூந்தப் பனை 
  4. தாளிப் பனை 
  5. குமுதிப்பனை
  6. சாற்றுப்பனை
  7. ஈச்சம்பனை
  8. ஈழப்பனை
  9. சீமைப்பனை
  10. ஆதம்பனை
  11. திப்பிலிப்பனை
  12. உடலற்பனை
  13. கிச்சிலிப்பனை
  14. குடைப்பனை
  15. இளம்பனை
  16. கூறைப்பனை
  17. இடுக்குப்பனை
  18. தாதம்பனை
  19. காந்தம்பனை
  20. பாக்குப்பனை
  21. ஈரம்பனை
  22. சீனப்பனை
  23. குண்டுப்பனை
  24. அலாம்பனை
  25. கொண்டைப்பனை
  26. ஏரிலைப்பனை
  27. ஏசறுப்பனை
  28. காட்டுப்பனை
  29. கதலிப்பனை
  30. வலியப்பனை
  31. வாதப்பனை
  32. அலகுப்பனை
  33. நிலப்பனை
  34. சனம்பனை

பனை மரத்தின் பயன்கள்:

பனை மரத்தில் கிடைக்கூடிய நொங்கினை நாம் சாப்பிடும் போது உடல் சூடு வியர்வை, போன்றவற்றை நீங்கும்.

அதே தோலுடன் நொங்கை சாப்பிட்டால் உடலில் அரிப்பு, எரிச்சல், சிறுநீரக எரிச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த பயன் அளிக்கிறது.

பிஞ்சு நொங்கினை சாப்பிட்டால் வயிற்று புண்ணுக்கு சிறந்த பலனை விரைவில் தருகிறது.

பனை கற்கண்டை சாப்பிடும் போது அம்மை நோயால் உடலுக்கு ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிடும்.

பனை கிழங்கை தினமும் சாப்பிடும் போது உடல் அழகு பெற்று உடல் வலிமையும் பெரும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com