நீங்கள் பிறந்த மாதம் எது? உங்களுடைய அதிர்ஷ்டம் இதுதான்..!

Pirantha Matha Palangal

பிறந்த மாத பலன்கள்..! Pirantha Matha Palan..! 

Pirantha Matha Palangal: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் நீங்கள் பிறந்த மாதத்தின் பலன்களை பற்றித்தான் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒவ்வொருவரின் பிறந்த மாதமும், பிறந்த நாளும் என்பது தனி சிறப்பு வாய்ந்த ஒன்று. அந்த வகையில் இந்தப் பதிவில் ஒருவரின் பிறந்த மாதத்தை வைத்து அவர்களுக்கு எந்த எண் அதிர்ஷ்டத்தை கொடுக்கும், அவர்கள் பிறந்த மாதத்தினை வைத்து என்னென்ன அதிர்ஷ்ட பலன்கள் உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!


Pirantha Matha Palangalஜனவரி மற்றும் அக்டோபர்:

ஜனவரி மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மாத எண்ணானது ஒன்று. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ துறையில் அதிகபலன் கிடைக்காது. ஜனவரி மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிப்ரவரி மற்றும் நவம்பர்:

பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு  அதிர்ஷ்ட எண்ணானது இரண்டு ஆகும். இவர்கள் சினிமா மற்றும் விளையாட்டு துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருப்பார்கள். கற்பனை திறன் அதிகம் கொண்ட இவர்கள் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்படுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

மார்ச் மற்றும் டிசம்பர்:

மார்ச் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணானது 3 ஆகும். மார்ச் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நிர்வாகம், மருத்துவம், மார்க்கெட்டிங் போன்ற தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இவர்கள் யாருக்கும் பணிந்து போகமாட்டார்கள்.

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள்:

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி செல்வமானது நன்றாக அமையும். இவர்களின் அதிர்ஷ்ட எண்ணானது 4 ஆகும். ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் சொந்தமாக தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். மேலும் நம்பிக்கையாளராக இருக்கக்கூடிய இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுபவர்களாகவும் இருப்பார்கள்.

newஎந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?

மே மாதம் பிறந்தவர்கள்:

மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணானது 5 ஆகும். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி திறன் நன்றாக இருக்கும். இவர்கள் அரசியல், நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீதிபதியாகவும் பணியாற்றுவார்கள். ஆனால் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தனிமையை விரும்ப கூடியவர்கள்.

ஜூன் மாதம் பிறந்தவர்கள்: 

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணானது 6 ஆகும். இவர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள்.

ஜூலை மாதம் பிறந்தவர்கள்:

ஜூலை மாதம் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண்ணானது 7 ஆகும். ஜூலை மாதம் பிறந்தவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் ஆர்வத்துடன்  சிறந்து விளங்கக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். மேலும் அவசரம், வெறுப்பு குணம் கொண்டவர்கள் இவர்களை பார்த்து விலகி செல்வார்கள்.

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள்:

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்ணானது 8 ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி செல்வமானது குறைவாகத்தான் இருக்கும். இவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் தான் இருக்கும். இவர்கள் மிகவும் தனிமையை விரும்பக்கூடியவர்கள். எந்த ஒரு செயலையும் தாமதமாக செய்து முடிக்க கூடியவர்கள்.

செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள்: 

செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்ணானது 9 ஆகும். இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாக துறை, நீதித்துறை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். எந்த செயலிலும் வெற்றிபெறக்கூடிய இவர்கள் அரிதான பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.

newபெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்