Power Button குறியீட்டுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா..?

Advertisement

Power Button in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். Power Button என்று சொன்னாலே நாம் பயன்படுத்தும் போன், கம்பியூட்டர், லேப்டாப், டிவி ரிமோட் போன்ற சாதனங்கள் தான் நினைவிற்கு வரும்.

இந்த Power Button குறியீட்டை நாம் பெரும்பாலும் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் மற்றும் டிவி ரிமோட் போன்றவற்றில் பார்த்திருப்போம். ஆனால் இந்த குறியீட்டுக்கு பின் ஒரு கதை இருக்கிறது. இந்த குறியீடு எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் Power Button Symbol உருவான வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா..?

Power Button Symbol History in Tamil: 

Power Button in Tamil

இந்த Power Button குறியீட்டை மிகவும் பிரபலமான குறியீடு என்று சொல்லலாம். இந்த குறியீடு உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மின் அடுப்பு, மற்றும் வாஷிங் மெஷின் போன்ற மின்சாரம் அல்லது மின்னணு பயன்பாட்டிற்கான அனைத்து சாதனங்களிலும் இந்த குறியீடு ஆற்றல் கட்டுப்பாடு கருவியாய் இருக்கும்.

நீங்கள் இந்த பவர் பட்டன் குறியீட்டை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..? அதில் O (ஓ) மற்றும் I (ஐ) என்ற எழுத்துக்கள் இருக்கும். அதாவது, இந்த குறியீட்டில் உள்ள வட்டம் உடைந்து அதன் உள்ளே ஒரு கோடு செல்வது போல இருக்கும்.

ஆனால், அந்த குறியீடு 0 மற்றும் 1 என்ற எண்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகள் சொல்லும் கதை என்ன..?

 

Power Button Symbol

 1940 ஆம் ஆண்டுகளில் இந்த Power Button குறியீட்டை கணினி பொறியாளர்கள் வடிவமைத்தார்கள். கம்பியூட்டர் என்றாலே அது Binary Value அதாவது 0-1 என்று நம் அனைவருக்குமே தெரியும். 1 என்றால் ON என்றும், 0 என்றால் OFF என்றும் அர்த்தம். அதனால் கணினி பொறியாளர்கள் 0-1 என்ற எண்களை இணைத்து தான் இந்த குறியீட்டை உருவாக்கி உள்ளனர்.  

மேலும், 1973 ஆம் ஆண்டு சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) இந்த Power Button குறியீட்டை ஆற்றல் கருவி சின்னமாக அறிமுகப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் இதுபோன்ற 0-1 என்ற எண்கள் கொண்ட குறியீட்டை வெவ்வேறு வடிவங்களில் கூட காணலாம்.

உங்கள் போன் Charger -ல் இது போன்ற Symbols இருக்கிறதா..? அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement