ராகி (கேழ்வரகு) பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Ragi in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ராகி (கேழ்வரகு) பற்றிய விவரங்களை (Ragi in Tamil) இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் மிக மிக விரும்பி அல்லது விருப்பமே இல்லாமல் உண்ணும் உணவுகளை பற்றிய தகவல் நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு. அதாவது ஒரு பொருளின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், பயன்கள் போன்றவற்றை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் நம்மில் பலரும் அவ்வளவாக விருப்பமே இல்லாமல் சாப்பிடும் ராகியின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..

Finger Millet in Tamil:

Finger Millet in Tamil

கேழ்வரகு அல்லது ராகி என்பது ஆண்டுக்கு ஒரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இது போவாசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டது அதன் பிறகு ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர்.

பொதுவாக கேழ்வரகு வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. அதனால் இது இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

மொறு மொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி

கேழ்வரகின் வகைகள்:

  1. எல்லூசின் இண்டிகா
  2. எல்லூசின் கோரகானா

பிறப்பிடம்:

ராகி ஆப்பிரிக்கா கண்டத்தில் உருவானது என்றும் அதன் பிறகு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது என்று கூறப்படுகிறது. அதனால் ஆப்பிரிக்கா கண்டம் தான் ராகியின் பிறப்பிடமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வேறுபெயர்கள்:

Ragi Information in tamil

ராகி அல்லது கேழ்வரகு என்று தமிழிலும், பிங்கர் மில்லட் (Finger Millet) என்று ஆங்கிலத்திலும், குரக்கன் என்று இலங்கையிலும், ஆரியம் மற்றும் கேப்பை ஆகிய வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

முருங்கை கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சி வைச்சிருக்கணும்

ஊட்டச்சத்துக்கள்:

100 கிராம் கேழ்வரகில்,

  • 320 மில்லி கிராம் கலோரி
  • 11.18 கிராம் நார்ச் சத்து
  • 66.82 கிராம் கார்போஹைட்ரேட்
  • 1.92 கிராம் கொழுப்பு
  • 7.16 கிராம் புரதம் 
  • 364 மில்லி கிராம் கால்சியம்
  • 4.62 மில்லி கிராம் இரும்பு
  • 146 மில்லி கிராம் மெக்னீசியம்
  • 210 மில்லி கிராம் பாஸ்பரஸ்
  • 443 மில்லி கிராம் பொட்டாசியம்
  • 3.19 மில்லி கிராம் மாங்கனீசு
  • 2.53 மில்லி கிராம் துத்தநாகம் 

பயன்கள்:

  • ராகி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.
  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
  • புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடலுக்கு அளிக்கிறது.
  • இதய பாதுகாப்பிற்கு சிறந்தது.
  • கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் சிறந்த உணவாக உள்ளது.
  • ராகி உங்களை இளமையாக வைத்திருக்க பயன்படுகிறது.
  • எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement