ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Reason For The Stones On Rail Tracks in Tamil 

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். நாம் அனைவருமே ரயிலில் பயணம் செய்திருப்போம். சிறு குழந்தைகளாக இருக்கும் போது ரயில் என்று சொன்னாலே ஆசையுடன் பார்ப்போம்.

அனைவருக்கும் ரயில் எந்த அளவிற்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு ரயில் தண்டவாளத்தில் நடக்கவும் பிடிக்கும். அதேபோல் நாம் சிறு வயதிலியிருந்தே ரயில் மற்றும் தண்டவாளங்களை பார்த்து வருகிறோம். தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் இருக்கும். அதை நாம் பார்த்திருப்போம். தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்று என்றாவது யோசித்திருப்போமா..? அதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

ரயில் தண்டவாளங்களில் ஏன் கற்கள் இருக்கின்றன..? 

ரயில் தண்டவாளங்களில் ஏன் கற்கள் இருக்கின்றன

பொதுவாக நாம் சாலையில் செல்லும் போது சிறிய கல் இருந்தால் கூட அது நமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும். ஆனால் ரயில் தண்டவாளங்களில் எவ்வளவு கற்கள் இருக்கின்றன.

நாம் பார்த்த வரை அனைத்து ரயில் செல்லும் பாதைகளில் எல்லாம் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. அவை ஏன் எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்று நமக்குள் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.

 ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது அதிக எடையை கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் ரயில்கள் தண்டவாளத்தில் வேகமாக செல்வதால் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்காக தான் ஜல்லி கற்கள் போடப்படுகின்றன. 

அதுமட்டுமில்லாமல்,  அதிக வெப்பத்தினால் நிலத்தில் ஏற்படும் அதிர்வு மற்றும் கடினமான வானிலை காரணமாக ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்கிறது. அந்த நேரத்தில் தண்டவாளங்கள் விலகாமல் தடுப்பதற்காக தான் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுகிறது .

மேலும், தண்டவாளங்களில் வளரும் தாவரங்களின் வளர்ச்சி காரணமாக ரயில்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் தண்டவாளங்களில் கற்கள் போடப்படுகின்றன.

அதுமட்டுமில்லாமல், மழையின் போது மழை நீர் தேங்கி தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்காக கற்களை வைத்து தண்டவாளங்கள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தண்டவாளத்தில் செல்லும் ரயில்கள் வழுக்காமல் தடுப்பதற்காக கூர்மையான ஜல்லி கற்கள் போடப்படுகின்றன.

மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement