மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

Advertisement

 Manvasam Scientific Reason in Tamil

பொதுநலம்.காம் பதிவின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். மழை என்று சொன்னாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். மழையை ரசிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா..? இருந்தாலும் இந்த உலகில் மழையை விட மண்வாசத்தை ரசிப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். உங்களுக்கு மண் வாசம் பிடிக்குமா..? மழைப் பெய்யும் போது ஏன் மண் வாசம் வருகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மழைப் பெய்யும் போது மண்வாசம் ஏன் வருகிறது..? 

மழைப் பெய்யும் போது நாம் கவனித்திருப்போம். ஒரு இனிமையான வாசனை வரும். அதை நாம் மண் வாசனை என்று சொல்கிறோம். மழைப் பெய்யும் போது வரும் அந்த வாசனை நம் அனைவருக்குமே பிடிக்கும்.

மழைப் பெய்யும் போது வரும் வாசனைக்கு காரணம் மண் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை கிடையாது.

மண்வாசம் வர காரணம் என்ன..?  

மண் வாசனைக்கு உண்மையான காரணம் சில பாக்டீரியாக்கள், செடிகள் மற்றும் இடி மின்னலும் காரணமாகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மண் வாசனைக்கு ஆங்கிலத்தில் பெட்ரிகோர் ( Petrichor ) என்று பெயர். 1964 ஆம் ஆண்டு மண் வாசனை குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் இதற்கு பெட்ரிகோர் என்று பெயர் வைத்தனர்.

வளமான மண்ணில் வாழும் ஆக்டினோமைசெட்ஸ் என்ற இழை பாக்டீரியாக்கள் என்று சொல்ல கூடிய நுண்ணுயிர்கள் வெளியிடும் ஜியோஸ்மின் என்னும் சேர்மத்தால் இந்த வாசனை ஏற்படுகிறது.

 மண் வறண்டு காய்ந்து போகும் போது இந்த பாக்டீரியாக்கள் வித்துக்களை உருவாக்குகின்றன. அந்த நேரத்தில் இந்த பாக்டீரியாக்கள் ஜியோஸ்மின் என்ற சேர்மத்தை சுரக்கின்றன. அந்த சேர்மங்கள் மண்ணிலே தங்கி விடுகின்றன. வறண்ட காலங்களுக்கு பின் மழைப் பெய்யும் போது மண்ணில் இருக்கும் வித்துக்களுடன் ஜியோஸ்மின் காற்றில் கலந்து வேதிவினை நடப்பதால் தான் இந்த மண்வாசனை ஏற்படுகிறது.  

இந்த மண் வாசனை மழைப் பெய்யும் எல்லா நாட்களிலும் வராது. வறண்ட காலங்களுக்கு பிறகு மழைப் பெய்தால் மட்டும் தான் இந்த மண் வாசனையை நம்மால் நுகரமுடியும்.

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் என்ன..?

மழைப் பெய்யும் முன் மண்வாசனை வர காரணம் என்ன..? 

அதேபோல மழைப் பெய்யும் முன் ஒரு மண் வாசனை வரும். அந்த வாசனையை வைத்து மழை வரப்போகிறது என்று சொல்வார்கள்.

 அந்த வாசனைக்கு காரணம் ஓசோன் படலம் தான். காரணம் இடி மின்னலுடன் மழை வரும் போது ஏற்படும் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. அவை வளிமண்டலத்தில் உள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து ஓசோனை உருவாக்குகின்றன.  

புயல் மேகங்கள் பூமியை நோக்கி வரும் போது ஓசோனில் இருக்கும் அந்த வாசத்தை கொண்டு வருகின்றன. அதன் காரணமாக தான் மழைப் பெய்யும் முன் வாசனை வருகிறது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement