உங்கள் தாய், தந்தைக்காக எதெல்லாம் பிள்ளைகள் செய்ய வேண்டும் தெரியுமா.?

Advertisement

பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பிள்ளைகள் என்ன தான் வளர்ந்தாலும் பெற்றோர்களுக்கு குழந்தை தான். அதே போல்தாய், தந்தைக்கு வயதான பிறகு அவர்களை குழந்தையாய் நினைக்க வேண்டும். நினைப்பதோடு இல்லாமல் அவர்களை அப்படி பார்த்து கொள்ள வேண்டும். மகன் அல்லது மகள் தன் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அப்படி என்ன கடைமைகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ குழந்தைகள் சண்டை போடும் போது பெற்றோர்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்

பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டியது:

பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பெற்றோர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஒரு குழந்தையை எப்படி பார்த்து கொள்வீர்களோ  அப்படி பார்த்து கொள்ள வேண்டும்.

மன்னிப்பு:

நீங்கள் எதாவது தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். உங்களின் ஆணவத்தை பெற்றோர்களிடம் காட்டாதீர்கள்.

கற்பித்தல்:

பெற்றோர்கள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்களுக்கு தெரிந்த விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் பெற்றோர்களுக்கு தெரியாது. அதனால் உங்களுக்கு தெரிந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவில்லை என்றால் கற்று கொடுங்கள்.

உரையாடுவது:

பெற்றோர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் Free-ஆ இருக்கும் நேரங்களில் போனை பார்க்காமல் பெற்றோர்களுடன் உரையாடுங்கள்.

கட்டளை:

பெற்றோர்களுக்கு கட்டளை போடாதீர்கள். இதை தான் செய்ய வேண்டும். இந்த செயல்கள் செய்ய கூடாது என்று சொல்லாதீர்கள். சுதந்திரமாக இருக்க விடுங்கள்.

ஆலோசனை: 

நீங்கள் இந்த விஷயம் செய்வது நல்லதா, கெட்டதா என்று பெற்றோர்களிடம் கேளுங்கள். நீங்கள் எடுக்கும் செயல்களின் முடிவை பெற்றோரிடம் கலந்துரையாடுங்கள். அவர்கள் சொல்வதும் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

பணம்:

உங்களின் தேவைக்காக நீங்கள் கேட்கும் முன் பணத்தை கொடுப்பார்கள். அது போல் அவர்க்ளின் தேவைகளை அறிவதற்கு முன் பணத்தை கொடுங்கள்.

அன்பு:

பெற்றோர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கோவமாக பேசாதீர்கள். அவர்கள் சோர்ந்து போகும் நேரத்தில் நான் இருக்கிறேன் என்று அவர்களிடம் ஆறுதலாக இருங்கள்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் உங்கள் பெற்றோர்களை கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்க்காதீர்கள். ஏனென்றால் நீங்களும் அந்த இடத்திற்கு வருவீர்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement