Sago in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அது என்ன தகவல் என்றால் நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தும் ஒரு பொருளான சவ்வரிசி பற்றிய தகவல்கள் தான். அது என்ன சவ்வரிசி பற்றிய என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதாவது நாம் அனைவருமே நாம் சாப்பிடும் பல வகையான உணவுகளில் இந்த சவ்வரிசியினை ஒரு முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தி இருப்போம். ஆனால் இதனை பற்றிய முழு விவரங்களும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அதாவது அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், மற்றும் இதனை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அப்படி உங்களுக்கு சவ்வரிசி பற்றி மேலே கூறியுள்ள இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி நண்பர்களே பதிவினுள் செல்லலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Sabudana in Tamil:
சவ்வரிசி என்பது இந்திய பாரம்பரிய உணவுகள் முதல் பன்னாட்டு உணவுகளில் முக்கியமான மூலப்பொருளாக உள்ளது. அதாவது சவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஓர் முக்கியமான உணவுப் பொருள் ஆகும்.
Sago Information in Tamil:
இந்த சவ்வரிசி, சவ்வரிசி மரம் (Metroxylon sagu) என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாவுப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அதாவது அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு (Mertroxylon Sagu) என்பதே உண்மையான சவ்வரிசி மரமாகும்.
இந்த சவ்வரிசி மரம் பொதுவாக தாழ்வான சதுப்பு நிலங்களில் தான் அதிக அளவு வளர்கின்றன. இது 9 மீட்டர் வரை வளர்கின்றன. இந்த மரத்தின் தண்டுப் பகுதி பொதுவாக மிகவும் தடிப்பாக விரிவடையும்.
அதேபோல் 15 ஆண்டுகளில் சவ்வரிசி தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். நல்ல முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த மரத்தில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்கும். அப்பொழுது தான் அதன் தண்டு பகுதியில் இருந்து மாவுப்பொருளை பிரித்து எடுப்பார்கள்.
கிராம்பினை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க
பிறப்பிடம்:
இதன் பிறப்பிடம் என்று இந்தோனேசியா தான் கூறப்படுகிறது. அதனால் இது இந்தோனேசியாவில் உள்ள பப்புவாத் தீவிலேயே அதிக அளவு பயிரிடப்படுகின்றன.
மேலும் இவை இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங் காடுகளாக வளர்ந்துள்ளன. அதே போல் போர்னியோ (Borneo) தீவிலும் இவை தற்போது பயிரிடப்படுகின்றன.
இவை பெரும்பாலும் இந்தோனேசியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டாலும் இந்தியா, இலங்கை முதல் உலகமெங்கும் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இதனை தமிழ் மொழியில் சவ்வரிசி என்றும், ஹிந்தி மொழியில் சபுதன (Sabudana) என்றும், ஆங்கில மொழியில் சாகோ (Sago) என்றும் அழைக்கப்படுகிறது.
பைன் பீன்ஸை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
பயன்கள்:
சவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
அதாவது சவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
ஜீரண கோளாறான அல்சரை போக்க இந்த சவ்வரிசி மிகவும் பயன்படுகின்றது.
பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |