சங்க நூல் தரும் செய்திகள்..!
வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். சங்க கால நூல்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவின் முலம் தெரிந்து கொள்வோம். இந்த சங்க காலமானது 3 வகையாக பிரிக்கப்படுகிறது. சங்க காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை நடந்து கொண்டிருந்தது. வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் சங்க கால நூல் தரும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
சங்க காலம் என்றால் என்ன:
சங்க காலம் என்பது தென்னிந்திய வரலாற்றில் நடந்த பண்டைய தமிழர்கள் தொடர்பான காலம் ஆகும். தமிழ் புலவர்கள் மதுரையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்து வந்ததால் இக்காலம் சங்க காலம் என பெயர் பெற்றது. இச்சங்ககாலம் இயற்கை நெறிக்காலம் என்று அழைக்கப்பட்டது. சங்ககாலத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இச்சங்ககாலத்தில் முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். காதல், வீரம் போன்ற இலக்கியங்களின் கருப்பொருளாக சங்ககாலம் திகழ்ந்து வந்தது.
முற்காலத்தில் தமிழகத்தில் 3 சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
- முதற்சங்கம்
- இடைச்சங்கம்
- கடைச்சங்கம்
இதில் கடைச்சங்க காலத்தையே வரலாற்று ஆசிரியர்கள் சங்ககாலமாக எடுத்து கொண்டனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வருகின்றன. ஒவ்வொரு சங்கத்திலும் சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு இருந்தன.
சங்ககால தமிழ் பெண் புலவர்கள் பெயர்கள் |
முதற்சங்கம் வரலாறு:
- சங்க காலத்தில் கடல் கொண்ட தென்மதுரையில் முதற்சங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.
- இச்சங்கத்தில் அகத்தியர் முதல் 4449 தமிழ் புலவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
- இச்சங்கத்தை காய்சின வழுதி, கடுங்கோன் பாண்டியன் போன்ற 89 மன்னர்கள் முதற்சங்கத்தை ஆதரித்து வந்தனர்.
- இந்த முதற்சங்கத்தில் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் இயற்றப்பட்டது.
- இந்த முதற்சங்கத்தில் உள்ள இலக்கணம் அகத்தியம்.
- முதற்சங்க காலப்பகுதி 4440 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது.
இடைச்சங்கம் வரலாறு:
- கடல் கொண்ட கபாடபுரம் என்னும் இடத்தில் இரண்டாவது சங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.
- இடைச்சங்கத்தில் அகத்தியர் முதல் தொல்காப்பியர் உட்பட 3700 புலவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
- வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் வரை 59 அரசர்கள் இடைச்சங்கத்தை ஆதரித்து வந்தனர்.
- கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்கள் இடைச்சங்கத்தில் இயற்றப்பட்டது.
- அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம் போன்ற இலக்கண நூல்கள் இடைச்சங்கத்தில் பின்பற்றப்பட்டது.
- இடைச்சங்க காலப்பகுதி 3700 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ சங்ககால பெண் பெயர்கள்
கடைச்சங்க காலம் :
- கடைச்சங்கம் மதுரையில் அமைக்கப்பட்டு இருந்தது.
- சிறு மேதாவியார் முதல் சேந்தம்பூதனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், நக்கீரனார் உட்பட 449 புலவர்கள் கடைச்சங்கத்தில் பங்கு பெற்றிருந்தனர்.
- இந்த கடைச்சங்கத்தை முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் வரை 49 மன்னர்கள் ஆதரித்து வந்தனர்.
- அகநானூறு, புறநானூறு, நெடுந்தொகை, நானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிப்பாடல், கலித்தொகை போன்ற நூல்கள் இந்த கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டது.
- இக்கடைசங்கத்தில் அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் பின்பற்றப்பட்டது.
- கடைச்சங்கத்தின் காலப்பகுதி 1850 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |