ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் இப்படி தான் இருப்பார்களா..! என்ன ஒரு ஆச்சரியம்..!

Advertisement

Sunday Born Personality in Tamil

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாம் மட்டும் இல்லாமல் நம்முடன் இன்னும் ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் இந்த உலகத்தில் வாழும் அனைவரும் நமக்கு தெரிந்தவர்களும் கிடையாது, உறவினர்களும் கிடையாது. அந்த வகையில் குறிப்பிட்ட நபர்களே நமக்கு தெரிந்தவர்களாக ஆவார். இப்படி இருக்கையில் நாம் பழகும் அனைவரும் ஒரே குணத்துடனும், ஒரே தோற்றத்தினை கொண்டவராகவும் இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணத்தினையும், உடல் அமைப்பினையும் உடையவர்களாகவே இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அவருடன் பழகாமல் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் இனி நீங்கள் ஒருவரின் குணமானது எப்படி இருக்கும் இன்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம். அதாவது ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர்கள் என்றும், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்:

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்

  • பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட தனித்துவம் வாய்ந்த ஒருவராக இருப்பார்கள். அதேபோல் தன்னமிக்கை, நம்பிக்கை, அதிக ஆற்றல் உடைய ஒரு நபராகவும் இருப்பார்கள்.
  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஒரு சிறந்த தலைவராகவும், எண்ணற்ற முயற்சிகளை செய்யக்கூடிய ஒரு நபராகவும் இருப்பார்கள். அதேபோல் ஒரு சில இடத்தில் மட்டும் பிடிவாதம் மற்றும் ஆளுமை குணம் வாய்ந்தவராக இருப்பார்கள்.
  • மேலும் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை கண்டு அஞ்சாமல் எப்போதும் விழிப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் இருப்பார்கள்.
  • அதேபோல் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் கொண்டு அச்சப்படாமல் எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.
  •  இவர்களின் பலவீனமாக பதற்றம் மற்றும் குழப்பங்கள் ஆனது ஒரு சில இடத்தில் தோன்றினாலும் கூட அவற்றை வெளிக்காட்டாமல் சிறப்பாக நடந்து கொள்வார்கள்.

திருமண வாழ்க்கை:

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதல் திருமணத்தை விரும்பக்கூடிய ஒரு நபராக தான் இருப்பார்கள். அதேபோல் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிகப்படியான பாசத்தினையும், அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக் கொள்வார்கள்.

தொழில்:

இந்த கிழமையில் பிறந்தவர்கள் இந்த தொழிலை மட்டுமே செய்வார்கள் என்று நிலையாக கூற முடியாது. ஏனென்றால் இவர்கள் வணிகம், மீடியா, கலைத்துறை மற்றும் எழுத்தாளர் என இத்தகைய வகைகளில் ஏதேனும் ஒன்றில் பணிபுரியும் வாய்ப்புகள் அதிகமாகஇருக்கிறது .

அதேபோல் இதில் எது நமக்கு ஏற்றதாக இருக்கும் என்று சிந்தித்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் ஆளுமை உடையவராகவும் இருப்பார்கள். அதேபோல் வருமானம் ரீதியாகவும் யோசித்தே எந்த முடிவாக இருந்தாலும் அதனை எடுப்பார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement