கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு | Karunanidhi History in Tamil..!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அந்த வகையில் நிறைய நபருக்கு கதை புத்தகம் படிப்பது என்பது ஒரு பழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வேறு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் அதனை தான் பலரும் விரும்பி படிப்பார்கள். ஒருவேளை இந்த பதிவினை வாசித்து கொண்டிருக்கும் உங்களுக்கும் இப்படி ஒரு பழக்கம் உள்ளது என்றால் இந்த பதிவு மிகவும் பயனளிக்கும் விதமாக தான் இருக்கும். ஏனென்றால் இன்று கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றினை தான் படிக்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து பார்க்கலாம்.
கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கலைஞர் பிறப்பு:
கருணாநிதி அவர்கள் 1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவேலை என்ற சிறிய கிராமத்தில் முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார்.
கருணாநிதிக்கு பெற்றோர் இட்ட பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாகும். பின்பு காலப்போக்கில் திரு கருணாநிதி அவர்கள் தட்சிணாமூர்த்தி என்று பெற்றோர் இட்ட பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
அதற்க்கு பிறகு மு. கருணாநிதி என்று மிகவும் சுருக்கமாக அனைவராலும் அழைக்கப்பட்டது.
கலைஞர் படிப்பு:
கலைஞர் அவர்கள் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கால படிப்பினையும், அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் அடுத்த நிலை படிப்பினையும் படித்தார். ஆனால் இவர் முழுமையாக உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி பெறவில்லை.
ஆனால் கருணாநிதி பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட தமிழ் மொழியில் ஒரு பகுதியாக காணப்படும் நாடகம், கவிதை, இலக்கியம் என இவற்றில் எல்லாம் நன்கு வல்லமை கொண்டவராக இருந்தார்.
கருணாநிதியின் ஆரம்ப படைப்பு:
மு. கருணாநிதி அவர்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டிருப்பதால் சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை படைத்து சிறந்த கதை ஆசிரியராக இருந்தார். அதிலும் குறிப்பாக பராசக்தி என்ற படம் ஆனது மக்களிடம் நல்ல வரவேற்பை கொண்டுபோய் சேர்த்தது.
மேலும் நாடகம் எழுதுவது, கதை புத்தகம், கவிதைகள், கட்டுரைகள் வரலாற்று நாவல்கள், இசை, வசனம் மற்றும் சிறு கதைகள் என எண்ணிலடங்காத நூலை எழுதி உள்ளார்.
பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு |
திருமண வாழ்க்கை:
திரு மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் ஆவார். இவர் இறந்த பிறகு தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கலைஞர் அவர்கள். மேலும் மூன்றாவது மனைவியாக ராஜாத்தியம்மாளை மணந்தார். எனவே கருணாநிதிக்கு மொத்த 3 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
கருணாநிதி அரசியல் வரலாறு:
ஆரம்ப காலத்தில் கதைகள் மற்றும் நாடகம் என இவ்வாறு எழுதுவதை மட்டும் வைத்து இருந்து திரு கலைஞர் அவர்கள் அழகிரிசாமியின் சமூகநலன்கள் குறித்த பேச்சினை கேட்ட பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு என்று தனியாக தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பினை செயல்படுத்த தொடங்கினார். அதன் பிறகு 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முரசொலி என்ற பத்திரிகையினை எழுதி அதன் மூலம் அவரை பிரபலமாக்கி கொண்டார்.
அதேபோல் முரசொலியினை தொடர்ந்து தமிழரசு, குடியரசு மற்றும் முத்தாரம் ஆகிய படைப்புகளையும் படைத்தார்.
கல்லக்குடி கருணாநிதி:
இதற்கு அடுத்த நிலையாக 1957-ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினராக திருச்சிராப்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு 1961-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்திலும் சேர்ந்தார்.
மேலும் திரு அண்ணாதுரை அவர்கள் தி.மு.க கட்சியில் முதல்வராக பணியாற்றிய போது 1967-ல் மரணம் அடைந்த காரணத்தினால் அடுத்த முதல்வராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராகவும் வலம் வந்தார்.
முதல்வராக கருணாநிதி:
- 1967
- 1971
- 1989
- 1996
- 2006
திரு கருணாநிதி அவர்கள் 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றினார்.
இறப்பு:
திரு கருணாநிதி அவர்கள் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று சென்னையில் உடல்நல குறைவால் தனது 94-ஆம் வயதில் இயற்கை எழுதினார்.
நான் விரும்பும் தலைவர் காமராசர் கட்டுரை |
காமராஜர் பொன்மொழிகள் |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |