வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அன்னை தெரசா அவர்களின் வாழ்க்கை வரலாறு

Updated On: July 25, 2023 11:30 AM
Follow Us:
annai therasa history in tamil
---Advertisement---
Advertisement

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

இன்றைய கால நவீன உலகத்தில் தேவைப்படுவது பணம், பொருள் போன்றவை தேவைப்பட்டாலும் நாம் கவலையில் இருக்கும் போது பணத்தை கொடுத்து சந்தோசத்தை வாங்க முடியாது. அன்பு, பாசம், கருணை இவை அனைத்திற்கும் உதாரணமாக வாழ்ந்து, இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை தெரசா. இவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவலிந்து காட்டியவர், இவருடைய வாழ்க்கையை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு:

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

பிறப்பு:

அன்னை தெரசா அவர்கள் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி  இவரது பெற்றோர்கள் பெயர்கள் நிக்கல் நிகோலா பொயாஜியூ திரானி என்பவர்களுக்கு மூன்றாவது மகளாக பிறந்தவர்.

இவருக்கு ஓரு சகோதரி, சகோதரன் உள்ளார்கள். சகோதரி பெயர் அகா, சகோதரன் பெயர் லாகஸ்.

அன்னை தெரசாவுக்கு எட்டு வயது இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். அதனால் இவரின் தாயார் அன்னை தெரசாவுக்கு நற்குணங்களை சொல்லி வளரத்தார்கள்.

நெல்சன் மண்டேலா வரலாறு..

தனது பள்ளி பருவத்தில் அனைவரையும் நகைசுவை உணர்வு உடையவராக இருந்தார்.

அன்னை தெரசா 12-ம் வயதில் சேமிக்க சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பொறகு 18-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அன்னை தெரசா ‘Sodality of children of Mary’ என்ற அமைப்பை சேர்ந்த லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை பணியாளராக இணைத்துக் கொண்டார்.

சமூக சேவை:
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

1929-ம் ஆண்டு தான் வேலை செய்த கிறிஸ்துவ அமைப்பு மூலமாக தான் இந்தியாவிற்கு வந்தார். டார்ஜிலிங் பகுதிக்கு சென்ற அன்னை தெரசா வங்காள மொழியை கற்க ஆரம்பித்தார். அதே பகுதயில் ஆசிரியராக வேலை பார்த்தார்.

ஆசிரியராக வேலை பார்த்தாலும் அவர் வாழ்ந்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பகுதியை சேர்ந்த மக்களின் வறுமையை நினைத்து கவலைப்பட்டார். அதனால் 1944-ம் ஆண்டு அவர் ஆசியறியார் பணியிலிருந்து விடைபெற்று ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 1946-ம் ஆண்டு செவிலியர் பணியை கற்று கொண்டார்.

1949 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மோதிஜில் என்கிற பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி தேவைக்காக பள்ளி ஒன்றை தொடங்க நினைத்தார. 1950 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைமை பேரவை அன்னை தெரேசாவிற்கு நிதி உதவி பெற்று சேவை செய்யும் கிறிஸ்தவ மத அமைப்பை தொடங்க அனுமதி வழங்கியது. பிறகு அதே ஆண்டு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் “நிர்மல் ஹ்ரிதை” என்கிற கிறிஸ்தவ அமைப்பை தொடங்கி ஏழைகள் நோயற்றவர்களுக்கு சேவைகளை செய்ய தொடங்கினார்.

கொல்கத்தாவின் சாந்தி நகர் என்கிற பகுதியில் தொழு நோயாளிகளுக்கான ஒரு மருத்துவ சேவை மையத்தை தொடங்கினார். தொழு நோயாளிகளுக்கு என இயங்கிய இந்த மருத்துவ சேவை மையம் பிற்காலத்தில் வெனிசுலா, தான்சானியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும் அன்னை தெரசாவின் கிறிஸ்தவ சேவை அமைப்பால் துவங்கப்பட்டது.

தீண்டாமை மற்றும் தொழுநோய் மக்களை வாழ்க்கையை கஷ்டமாக்கியது. தொழுநோயாளிகளை தொட்டு தூக்க மறுக்கப்பட்டவர்களை அன்னை தெரசா அன்போடு அணைத்து கொண்டார்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

விருதுகள்:

  • 1962 – பத்மஸ்ரீ விருது
  • 1972 – பன்னாட்டு புரிந்துணர்வுக்கான விருது
  • 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
  • 1680 – இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னாˮ விருது
  • 1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை
  • 2002 – அருளாளர் பட்டம்.
  • ‘புனிதர்’ பட்டம், போப் பிரான்சிஸ் வழங்கியது

இறப்பு:

தன வாழ்நாள் முழுவதையும் எல்லா மக்களுக்காகவும், நோயாளிக்காகவும் உழைத்த அவரது உடலில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி 87 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்”

 நான் விரும்பும் தலைவர் காமராசர் கட்டுரை
காமராஜர் பொன்மொழிகள்

 

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now