வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு..!

Updated On: July 12, 2023 10:43 AM
Follow Us:
parithimar kalaignar history in tamil
---Advertisement---
Advertisement

Parithimar Kalaignar History  

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய வரலாறு பதில் பரிதிமாற் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் பெரும்பாலும் பரிதிமாற் கலைஞரை பற்றி அவ்வளவாக கேள்வி பட்டிருக்க மாட்டோம். நம்முடைய படப் புத்தகத்தில் படித்ததோடு சரி. ஆனால் ஒரு சிலருக்கு அத்தகைய தகவல்கள் கூட தெரியாமல் இருக்கும். பரிதிமாற் கலைஞரின் சாதனைகள் என்பது நம்மில் சிலருக்கு தெரியாமல் இருப்பதால் இன்று அதனை பற்றிய முழு விவரத்தினையும் பார்க்கலாம் வாருங்கள்..!

காமராஜர் வாழ்க்கை வரலாறு

பரிதிமாற் கலைஞரின் பிறப்பு:

 பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் அருகே காணப்படும் விளாச்சேரி என்னும் ஊரில் 1870-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி பரிதிமாற் கலைஞர் பிறந்தார். இவரின் தந்தை பெயர்- கோவிந்த சிவன் மற்றும் தாயார் பெயர் லட்சுமி அம்மாள் என்பது ஆகும்.

பரிதிமாற் கலைஞருக்கு பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயண சாஸ்திரியர் என்பது ஆகும். ஆனால் காலம்போக்கில் இவரின் சிறப்பும், பெருமையும் இவருக்கு பரிதிமாற் கலைஞர் என்ற பெயர் ஆனது மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

பரிதிமாற் கலைஞரின் கல்வி:

  • பரிதிமாற் கலைஞருக்கு இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது அதில் உள்ள இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.
  • அதற்கு ஏற்றவாரு தமிழ் மொழியினை சபாபதி முதலியாரிடமும், வட மொழியினை தந்தை கோவிந்த சிவனிடமும் நன்றாக கற்று அதில் வல்லமையுடன் திகழ்ந்தார்.
  • மேலும் தமிழ் மொழியின் மீது ஆர்வத்திற்கு ஏற்றவாறு சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்து பெற்றோருக்கு பெருமை சேர்த்தார்.

மாணவர்களுக்கு கல்வி:

  • தமிழ் மொழியின் மீது அதிக ஆர்வம் வாய்ந்த மாணவர்களை அவருடைய வீட்டிலேயே அவர்களுக்கு தமிழ் மொழியினை கற்பிக்க வைத்தார்.
  • அதோடு மட்டும் இல்லாமல் அத்தகைய மாணவர்கள் அனைவருக்கும் இயற்றமிழ் மாணவர்கள் என்ற சிறப்பு பெயரினையும் சூட்டி அழைத்தார்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்:

  • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவதவதற்கு காரணமாக இருந்த நபர்களில் பரிதிமாற் கலைஞரும் முக்கிய பங்கினை வகித்தார்.

பரிதிமாற்கலைஞரின் நூல்கள்:

  • ரூபாவாதி, காலாவதி, பாவலர் விருந்து, மதிவாணன், நாடகவியல், மான விஜயம், தமிழ் வியாசங்கள் மற்றும் தனிப்பாசுரத் தொகை ஆகிய நூல்களை எழுதினார்.
  • இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தனிப்பாசுரத் தொகை என்ற நூலினை எழுதும் போது தனது பெற்றோர் வைத்த சூரியநாராயண சாஸ்திரியர் என்று பெயரை மாற்றி பரிதிமாற்கலைஞர் என்று மாற்றி வைத்து கொண்டார்.

சாதனை:

  • தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு பதிலாக வட மொழியினை கொண்டு வருவதாக பேச்சு வார்த்தை நடத்திய போது பரிதிமாற் கலைஞர் செய்த விடா முயற்சினால் அத்தகைய முடிவானது கைவிடப்பட்டது. இதுவும் இவரின் சாதனைக்குள் ஒன்றாக உள்ளது.

பட்டம்:

  • இவரின் கவிபாடும் திறன் மற்றும் தமிழில் இவருக்கு இருக்கும் சிந்தனை பற்றியும் அறிந்து திராவிட சாஸ்திரி என்னும் பட்டம் யாழ்பாணம் சி.வை.தாமோதரனார் அவர்களால் வழங்கப்பட்டது.
  • தமிழில் உயர்தனி செம்மொழியை நிலை நிறுத்தியதோடு மட்டும் இல்லாமல் அதில் நன்றாக வல்லமை பெற்றவராகவும் இருந்தார்.

இறப்பு:

பரிதிமாற் கலைஞர் என்று அழைக்கப்படும் சூரியநாராயண சாஸ்திரியர் 1903-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி அன்று காசநோயினால் பாதிக்கப்பட்டு திடிரென்று மரணம் அடைந்தார்.

இவர் வாழ்ந்த ஆண்டு ஆனது 30 வருடங்கள் மட்டும் இருந்தாலும் கூட இவரின் பெருமை ஆனது இன்றளவும் பேசப்பட்டு கொண்டு தான் உள்ளது.

 நான் விரும்பும் தலைவர் காமராசர் கட்டுரை
காமராஜர் பொன்மொழிகள்

 

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now