தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம் | Tamil Palamoligal

Tamil Palamoligal

தமிழ் பழமொழிகள் மற்றும் பொருள் | Tamil Palamoligal With Meaning

Tamil Palamoligal:- நமது முன்னோர்கள் நமது வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்த  பழமொழிகளை சொல்லி வந்தனர். இந்த பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவும், அறிவுரை கூறவும் பயன்படுகிறது. கிராமப்புற மக்கள் பேச்சு வார்த்தைகளில் பழமொழி கலந்து காணப்படும். அவர்கள் கூறும் பழமொழியில் நிறைய கருத்துக்கள் நிறைந்திருக்கும். அதனை கேர்ப்பதற்கும் ஆசையாக இருக்கும். சரி இந்த பதிவில் தமிழ் பழமொழிகளின் சரியான விளக்கங்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ் பழமொழிகள் விளக்கம் | Tamil Palamoligal | பழமொழிகள் தமிழ் விளக்கம் | பழமொழிகள் தமிழ் 10

1 வீட்டுக்கு வீடு வாசப்படி

இதன் பழமொழி விளக்கம்: ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கும்.

2. கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!

இதன் விளக்கம்: கோவில்களில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதனை நாம் கலைநயத்தோடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய் தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.

3. புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

இதன் பழமொழி விளக்கம்: பொதுவாக மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

4. பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!

இதன் பழமொழிகள் கருத்துக்கள்: பந்திக்கு முந்து என்பது சாப்பிட செல்லும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அதே போன்று போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது.

5. ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

இதன் பழமொழிகள் விளக்கம்: நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது.

6. விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

இதன் விளக்கம்: ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாட்களில் நன்றாக உணவு சாப்பிட வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் உணவை குறைவாய் சாப்பிட்டு மருந்து உண்ண வேண்டும்.

7. அடியாத மாடு படியாது.

இதன் விளக்கம்: மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

8. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

இதன் விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளை நன்றாக கவனித்து கொண்டால், அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.(என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே)

10. பத்துக்கு மேல் பத்தினி இல்லை

palamoligal in tamil – இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil