பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | Proverbs in Tamil

Tamil Proverbs

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Tamil Proverbs:- தமிழ் மொழி பேசுபவர்கள் பழக்க வழக்கத்திற்கு இடையே தோன்றும் ஒரு விஷயம் தான் பழமொழி. இதன் விளக்கம் சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாது என்றாலும். பழமொழியை பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் அன்றாடம் பேசும் போது ஒரு சில பழமொழிகளை சொல்லுவாங்க அதை கேட்பதற்கு அருமையாக இருக்கும். அவர்கள் சொல்லும் போது நகைச்சுவையாக இருந்தாலும் அவற்றில் ஆயிரம் அர்த்தங்களும் அடங்கி இருக்கும். இதன் காரணமாகவே பலருக்கும் பழமொழிகள் கூறவும், பேசவும் அதிக ஆர்வம் இருக்கும். இந்த பழமொழியில் பலவகைகள் இருக்கின்றது. அதாவது கல்வி பற்றிய பழமொழிகள், சுற்றுசூழல் பற்றிய பழமொழிகள், சிக்கனம் பற்றிய பழமொழிகள், மழை பற்றிய பழமொழிகள் என்று பலவகைகள் இருக்கிறது.

பொதுவாக பழமொழிகள் அனைவருக்குமே ஏதாவது ஒரு சமயத்தில் பயன்படும். உதாரணத்திற்கு சொல்லனும்னா பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பழமொழிகள் அதிகளவு பயன்படும். சரி அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம்

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் – Tamil Proverbs in English

Tamil ProverbsEnglish Proverbs
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்A friend in need is a friend indeed
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்A hungry man is an angry man
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதுGreat engines turn on small pivots
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?A young twig is easier twisted than an old tree
ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியேLike God, like worshipper
அதிக ஆசை அதிக நஷ்டம் – பேராசை பெரு நஷ்டம்Much would have more, and lost all
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்Justice stays long, but strikes at last
சிறு துரும்பும் பல் குத்த உதவும்A little string will tie a little bird
A little stream will run a light mill
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்Everyone rakes the embers to bake his own cake
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்Too much of anything is good for nothing
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் The beauty of the soul is known in the face
ஆழம் தெரியாமல் காலை விடாதேLook before you leap
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்Make hay while the sun shines
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்Man proposes God disposes

 

newபொது அறிவு வினா விடைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil