பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
Tamil Proverbs:- தமிழ் மொழி பேசுபவர்கள் பழக்க வழக்கத்திற்கு இடையே தோன்றும் ஒரு விஷயம் தான் பழமொழி. இதன் விளக்கம் சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாது என்றாலும். பழமொழியை பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் அன்றாடம் பேசும் போது ஒரு சில பழமொழிகளை சொல்லுவாங்க அதை கேட்பதற்கு அருமையாக இருக்கும். அவர்கள் சொல்லும் போது நகைச்சுவையாக இருந்தாலும் அவற்றில் ஆயிரம் அர்த்தங்களும் அடங்கி இருக்கும். இதன் காரணமாகவே பலருக்கும் பழமொழிகள் கூறவும், பேசவும் அதிக ஆர்வம் இருக்கும். இந்த பழமொழியில் பலவகைகள் இருக்கின்றது. அதாவது கல்வி பற்றிய பழமொழிகள், சுற்றுசூழல் பற்றிய பழமொழிகள், சிக்கனம் பற்றிய பழமொழிகள், மழை பற்றிய பழமொழிகள் என்று பலவகைகள் இருக்கிறது.
பொதுவாக பழமொழிகள் அனைவருக்குமே ஏதாவது ஒரு சமயத்தில் பயன்படும். உதாரணத்திற்கு சொல்லனும்னா பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பழமொழிகள் அதிகளவு பயன்படும். சரி அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ் பழமொழிகள் மற்றும் அதன் விளக்கம் |
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் – Tamil Proverbs in English
Tamil Proverbs | English Proverbs |
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் | A friend in need is a friend indeed |
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் | A hungry man is an angry man |
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது | Great engines turn on small pivots |
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? | A young twig is easier twisted than an old tree |
ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே | Like God, like worshipper |
அதிக ஆசை அதிக நஷ்டம் – பேராசை பெரு நஷ்டம் | Much would have more, and lost all |
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் | Justice stays long, but strikes at last |
சிறு துரும்பும் பல் குத்த உதவும் | A little string will tie a little bird |
A little stream will run a light mill | |
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் | Everyone rakes the embers to bake his own cake |
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் | Too much of anything is good for nothing |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | The beauty of the soul is known in the face |
ஆழம் தெரியாமல் காலை விடாதே | Look before you leap |
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் | Make hay while the sun shines |
நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் | Man proposes God disposes |
பொது அறிவு வினா விடைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |