தமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Varthai Vilayattu

Tamil Varthai Vilayattu

Tamil Varthai Vilayattu

பொதுநலம்.காம் வாசகர் அனைவருக்கும் எங்களின் அன்பான வணக்கங்கள். விளையாட்டு (Game) என்பது பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது பாரம்பரிய விளையாட்டுகள் முதல் தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்தி பலவகையான விளையாட்டுகளை விளையாடுகின்றன.

விளையாட்டு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடிக்கும். இத்தகைய விளையாட்டுகளில் கூட நமது அறிவு திறனை அதிகரிக்க முடியும். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் வார்த்தை விளையாட்டுகளை பற்றி பார்க்கலாமா.. தமிழ் வார்த்தை விளையாட்டு என்பது சம்மந்தமே இல்லாமல் சில எழுத்துக்கள் இருக்கும், அந்த எழுத்துக்களை சரியாக இணைத்து நாம் ஒரு வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு ர கா ம் டி க  இந்த எழுத்துக்கள் படிப்பதற்கு சம்மந்தமே இல்லாதது போல் இருக்கும். இந்த எழுத்துக்களை சரியாக கோர்த்தால் கடிகாரம் என்ற வார்த்தை கிடைக்கும். இதற்கு பெயர்தான் வார்த்தை விளையாட்டு.  மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட IMAGES-ஐ கொண்டும் தமிழ் வார்த்தை விளையாட்டுகள் விளையாடப்படுகிறது.

மூளைக்கு வேலை தரும் புதிர்கள் – Tamil Words Games:

தமிழ் வார்த்தை விளையாட்டு விடை
ர கா ம் டி க கடிகாரம்
 நி தே  ன் வு லதேன்நிலவு
ல் ன வா விவானவில்
 ண் டை  ச சண்டை
ல் வா ய் காகால்வாய்
த ஜை பூ யு ஆஆயுதபூஜை
த் வை து ர முவைரமுத்து
லி கி ங் சசங்கிலி
ம் ர ம ச ர அஅரசமரம் 
க் கை டை ட் குகைக்குட்டை 
க் டு டி ப ட் கபடிக்கட்டு
கா மே ர் ம் ககார்மேகம்
ணி டு கூ ம ண்மணிக்கூண்டு
க் டை சா க சாக்கடை
ம் அ சி த் வ தி யா ய
அத்தியாவசியம்
த் ம் து க த நா
துத்தநாகம்
க் போ கு ரு கு ட் ம் டா
குருட்டாம்போக்கு
ம் க க் னி தா ள ய ஞ் ய சி
தானியக்களஞ்சியம்
ர் ந் த நி ம் ப் ப
நிர்பந்தம்
த் ல் த ய க டு து ப மை
மையகபடுத்துதல்
வு ஆ ம் ய் ட கூஆய்வுகூடம்
ர் த த் ல் டு தொ போபோர் தொடுத்தல்
ய கா ரி சி ரி தகாரியதரிசி
ட் ச டை அ ச் ரைஅரைச்சட்டை
கு றா ப றை ற் க்பற்றாக்குறை
வா ம் சி தே ய ததேசியவாதம்
த் தா ந் த சி ம்
சித்தாந்தம்
க ள் து கு ணு க்
துணுக்குகள்

 

சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள்
தமிழ் விடுகதை மற்றும் விடைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil