விளையாட்டு வகைகள் | Tamilaga Vilayattu in Tamil | தமிழக பாரம்பரிய விளையாட்டுகள் யாவை
Tamilar Vilayattu in Tamil: கோடை காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் அனைத்தும் இன்று ஒரு ஸ்மார்ட் போனில் அடங்கிவிட்டது. அந்த காலத்தில் கோடை விடுமுறை என்றாலே நண்பர்களுடன் வெளி இடங்களில் விளையாடுவது தான். விடுமுறை நாட்களில் வீட்டு திண்ணையில் அமர்ந்து பெண்கள் அவர்கள் தோழிகளுடன் பல்லாங்குழி, தாயம், நொண்டி, கண்ணாமூச்சி, சிறுவர்கள் பம்பரம், கோலி, கபடி போன்ற பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள். இன்று ஸ்மார்ட் போனில் உலகம் மாறியதால் தெருவில் சிறுவர்கள் விளையாடிய காலங்கள் மாறி தெருக்களும் வெறிச்சோடி விட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.
பாரம்பரிய விளையாட்டு பெயர்கள்:
விளையாட்டின் முக்கியத்துவம்:
இன்றைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து கம்ப்யூட்டர் கேம்ஸ், மொபைலில் கேம் விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படமால் உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள முடியும்.
விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு மனதில் அதிக வலிமை பிறக்கும். விளையாட்டின் போது ஏற்படக்கூடிய வெற்றி மற்றும் தோல்வியினை சந்திக்கும் போது மன வலிமை அதிகரித்து வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தினை சமாளிக்கும் பக்குவம் அவர்களுக்குள் பிறக்கும். குழந்தைகள் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால், உடல் நலம் மட்டுமின்றி மன நலமும் சிறப்பாக இருக்க உதவும்.
வெளி இடங்களில் விளையாடும் விளையாட்டுகள் பெயர்கள்
விளையாட்டு வகைகள் |
ஓணப்பந்து விளையாட்டு (பந்தடி விளையாட்டு) |
கிட்டி புள்ளு |
கிளித்தட்டு |
சடுகுடு/கபடி |
எட்டுக்கோடு |
வழுக்கு மரம் ஏறுதல் |
கயிறு இழுத்தல் |
உறியடி |
பாரிவேட்டை (முயல்வேட்டை) |
பல்லாங்குழி |
இரட்டை மாட்டுப் பந்தயம் |
கண்ணாமூச்சி |
ஆடு புலி ஆட்டம் |
மஞ்சள் நீர் தெளித்தல் |
அம்பெறிதல் |
கோழிச்சண்டை |
வண்டிச்சவாரி |
சில்லுக்கோடு |
இளவட்டக் கல் |
கீச்சு மச்சுத் தம்பலம் |
வீடு கட்டி விளையாடுதல் |
கயிறடித்தல் |
குலை குலையாய் முந்திரிக்காய் |
கப்பல் விடுதல் |
உப்பு மூட்டை |
தேர் கட்டி விளையாட்டு |
எறி பந்து |
ஊஞ்சல் |
புளியடி புளியடி |
சாக்கு ஓட்டம் |
பச்சைக் குதிரை |
காற்றாடி |
எலியும் பூனையும் |
பட்டம் விடுதல் |
ஓடிப் பிடித்தல் |
கண்கட்டிப் பிடித்தல்/ கண் பொத்தி விளையாட்டு |
கயிறு பாய்தல் |
ஊசி நூல் கோர்த்தல் |
தட்டாங்கல் |
மரம் ஏறுதல் |
வளையல் விளையாட்டு |
குத்து விளையாட்டு |
மரங்கொத்தி (விளையாட்டு) |
வண்டியுருட்டுதல் |
உள்ளக விளையாட்டு வகைகள்:
தாயக் கட்டை |
சொக்கட்டான் |
கொக்கான் |
மூன்றுகல் ஆட்டம் |
பாம்பும் ஏணியும் |
பாண்டி |
பம்பரம் |
ஆடுபுலி ஆட்டம் |
செப்புசாமான் |
கூட்டாஞ்சோறாக்கல் |
ஒத்தையா, ரெட்டையா |
பருப்புக்கட |
கரகர வண்டி |
சீதைப் பாண்டி |
ஒருகுடம் தண்ணி ஊத்தி |
ஆடவர் விளையாட்டு வகைகள்:
ஜல்லிக்கட்டு |
பாரிவேட்டை |
சிலம்பம் |
புலிவேடம் |
சடுகுடு |
இளவட்டக்கல் |
ஓட்டம் |
உரிமரம் ஏறுதல் |
பானை உடைத்தல் |
உறிப்பானை விளையாட்டு |
சூதுதாயம் |
வாய்ப்புநிலை விளையாட்டுகள் |