வாழைப்பழம் வகைகள் பெயர்கள் | Types of Banana in Tamil

Types of banana in tamil

வாழைப்பழம் வகைகள் | Types of Banana Names in Tamil

Types of Banana And its Benefits in Tamil: மா, பலா, வாழை என்று சொல்லக்கூடிய முக்கனிகளில் கடைசியான பழமாக வாழைப்பழம் இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று வாழைப்பழம். இந்த பழத்தில் பலவகையான வகைகள் உள்ளன, ஒவ்வொரு வகையான பழங்களுமே அதிக சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பதிவில் வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

வாழைப்பழம் வகைகள் – Types of Banana in Tamil
வாழைப்பழத்தின் பெயர் நன்மைகள் தீமைகள் 
பூவம் பழம் தசைகளின் ஆரோக்கியத்திற்கும், இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கும், செரிமான கோளாறுகள் மற்றும் ஜீரண சக்தியை  அதிகரிக்கவும் உதவுகிறது.மூச்சு திணறல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் குளிர்ச்சியானவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
ரஸ்தாளி பழம் வயிற்று போக்கை குணப்படுத்த ரஸ்தாளி பழத்தை பிசைந்து நீரில் கலந்து குடித்து வரலாம்.இதில் மருத்துவ குணங்கள் குறைவு என்பதால் இந்த வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. 
மொந்தம் வாழைப்பழம் உடல் வறட்சி, உடலில் சக்தி அதிகரிக்கும், இரத்த உற்பத்தியை அதிகரிக்க, மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவுகிறது. அதிகமாக சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவது நல்லது.வாதநோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது. 
பேயன் வாழைப்பழம்வயிறு, குடல் புண், உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு பழங்கள் சாப்பிடலாம்.உடல் குளிர்ச்சியானவர்கள் பேயன் பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பச்சை அல்லது பச்சை நாடா வாழைப்பழம்இரத்த உற்பத்தியை அதிகரிக்க, மலச்சிக்கலை சரி செய்ய உதவும்.வாதம், ஆஸ்துமா, காச நோய் உள்ளவர்கள் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கற்பூரவள்ளி மூளை வளர்ச்சிக்கு, இரத்த உற்பத்திக்கு, தலைவலி, தோலில் ஏற்படும் புண்கள் போன்றவற்றை சரி செய்ய உதவும்.
நேந்திர வாழைப்பழம் உடல் எடை அதிகரிக்க, வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது. இதில் அதிக அளவு புரதம் உள்ளது.
கதளி மற்றும் எலச்சி வாழைப்பழம்கதளி வாழைப்பழம் செல்களின் செயலை சீராக்க உதவுகிறது. எலச்சி பழம் மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நவரை வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம்இந்த வகை பழங்களில் அதிக அளவு நன்மைகள் இல்லை, ஆனால் இந்த பழங்கள் உடலுக்கு சில விதமான தீமைகளை கொடுக்கின்றன. எனவே இந்த பழங்களை குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.
வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம்

 

மலை வாழைப்பழம் பயன்கள்
பழங்களின் இன்றைய விலை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil