வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..!

Unemployed-Scheme-Details-in-Tamil1

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை..! How can I get unemployment allowance in Tamilnadu..!

Unemployed Allowance Details in Tamil:- அனைவருக்கும் வணக்கம் தமிழக அரசு மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தபடுகிறது. சரி இந்த திட்டத்தை பற்றி தெளிவாக படித்தறியலாம் வாங்க. 

அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்..! மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..!

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை திட்டம்..! 

யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:-

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம்.
  • இளங்கலை / முதுகலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்.
  • இருப்பினும் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் விவசாயம், சட்டம் போன்ற பட்ட படிப்பு படித்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

உதவி தொகை விவரம் / Velai illa Pattathari Scholarship:-

தகுதிமாதம் வழங்கப்படும் உதவி தொகை
10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்குரூ.200/-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குரூ.300/-
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் அதற்கு சமமான தகுதிபெற்றவர்களுக்குரூ.400/-
பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்குரூ.600/-

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பு காலம்:-

மேல் கூறப்பட்டுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Employment Office இல் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் தாங்கள் உதவி தொகையினை பெற இயலும்.

விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம்:-

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50,000/- க்கு மேல் இருக்க கூடாது. ரூ.50,000/- மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.

வயது வரம்பு:-

  1. பொது பிரிவினர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. மற்ற பிரிவினர்கள் 45 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பெற்ற பின் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:-

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய தொழில் ஈடுபட்டவராவோ இருந்தல் கூடாது. அதேபோல் விண்ணப்பதாரர்கள் தனியார் அல்லது அரசு துறைகளிடமிருந்து வேறு எந்த வகையிலும் உதவி தொகையினை பெறுபவராக இருந்தல் கூடாது.

இந்த உதவி தொகை பெறுவதன் மூலம் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது.

வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறும் காலத்தில் பதிவை தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும்.

மேலும் இந்த Unemployed Allowance Scheme Details in Tamilnadu முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து படிக்கவும்.

Velai Illa Pattathari Uthavi Thogai Form

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் (Notification and application)click here

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil