வடுவூர் பறவைகள் சரணாலயத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா.?

paravaigal saranalayam in tamil

வடுவூர் பறவைகள் சரணாலயம்

1999-ம் ஆண்டு ஜூலை  மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பறவைகளின் சரணாலயம் 15 உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள வடுவூர் பறவைகளின் சரணாலயத்தை பற்றி தெரிந்துகொள்வோம். தஞ்சையிலிருந்து 25 கி.மீ தூரத்தில் வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் போது பிளாஸ்டிக் கவர், கெமிக்கல் சம்மந்தப்பட்ட பொருட்களை உள்ளே எடுத்து செல்ல கூடாது. இந்த ஏரியை பார்ப்பதற்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கு 20 முதல் 100 ரூபாய் கட்டணமாக வசூலீக்கப்படுகிறது. மேலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ கானா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்

பறவைகளுக்கு ஏற்ற காலம்:

இந்த சரணாலயத்திற்கு வருவதற்கு ஏற்ற காலங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர். ஏனென்றால்  இம்மாதங்களில் அதிகமான பறவைகள் அதாவது 2 லட்சத்துக்கு அதிகமான பறவைகள் வருமாம். இந்த பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்ககத்திற்காகவும் அங்கு வருகிறது.

பறவைகள் சரணாலயம்:

வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, ஊசிவால் வாத்து, நீர்க்காகம், கிளுவை, ஹெரான், துடுப்பு வாயன், பாம்புத் தாரா, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை மற்றும் நீளவால் தாழைக்கோழி போன்ற 40க்கும் அதிகமான  நீர் பறவைகள் உள்ளன.

தண்ணீர் எப்படி சேமிப்பார்கள்:

மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கு என்று விடப்படும் நீரை சேமிக்கிறார்கள். வடுவூர் பறவைகளின் சரணாயத்தில் நடப்பதற்கு தனியாக நடைபாதை, உட்காருவதற்கு சேர், கோபுரங்கள் போன்றவை சிமெண்டால் கட்டப்பட்டிருக்கிறது. சரணாலயத்தை சுற்றி மரங்கள் இருப்பதால் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த சரணாலயத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்தால் பறவைகள் அதிகமாக காணப்படும். இந்த நேரத்தில் சென்று பறவைகளை பார்த்து மகிழுங்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com