வெள்ளி கோள் பற்றிய தகவல் | Venus Planet in Tamil

Venus Planet in Tamil

வெள்ளி கோள் பற்றிய தகவல் தமிழில் | Venus Planet Information in Tamil

வணக்கம் இன்றைய பதிவில் வெள்ளி கோள் பற்றிய அறிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம். கோள்களை பற்றி நாம் சிறிய வயதில் பாட புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால் இன்று கோள்கள் பற்றி ஒரு சிலருக்கு நன்றாக நினைவில் இருக்கும். ஒரு சிலருக்கு மறந்து போய் இருக்கும். சூரிய குடும்பத்தில் உள்ள கோல்கள் மொத்தம் 9 வகைப்படும். அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள் வகையாகும். இந்த கோள் வகைகளில் வெள்ளி கோளை பற்றி சுவாரஸ்யமான தகவலை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில்

வெள்ளி கோள் பற்றிய விவரம்:

சுற்றுப்பாதை காலம் 225 பூமி நாட்கள்
ஆரம்6,052 கிலோமீட்டர்
விட்டம்12,104 கி.மீ
பூமத்திய ரேகை சுற்றளவு 38,025 கி.மீ
நிறை 4.87 × 10^24 கிலோ (0.82 பூமி)
சுற்றுப்பாதை தூரம் 108,209,475 கிமீ (0.73 AU)
கிரக வகை நிலப்பரப்பு
மேற்பரப்பு வெப்பநிலை 462. °C
நிலவுகள்நிலவு இல்லை

வெள்ளி கோளின் அறிமுகம்:

Venus Planet in Tamil

Venus (வெள்ளி கோள்) சூரியனிடமிருந்து உள்ள இரண்டாம் வெப்ப கிரகம் Venus (வெள்ளி கோள்) ஆகும். ஆறாவது பெரிய கிரகம் மற்றும் இரண்டாவது பெரிய நிலபரப்பு கிரகம். வெள்ளி கோள் அதன் அச்சில் ஒரு முறை சுற்றுவதற்கு 243 பூமி நாட்கள் ஆகும். இது ஒரு மைய இரும்பு கோர், ராக் மேன்டில் மற்றும் சிலிகேட் மேலோடு ஆகியவற்றை கொண்டு உருவானது என்று கருதப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

-3.8 முதல் -4.6 வரை Venus மிகவும் பிரகாசமாக இருக்கிறது. எனவே பகல் நேரத்தில் இதை தெளிவாக கண்டு ரசிக்கலாம். Venus-ல் வளிமண்டல அழுத்தம் பூமியை விட 92 மடங்கு அதிகம். Venus-ன் மேற்பரப்பில் உணரப்படும் அழுத்தம் பூமி கடலுக்கு அடியில் இருக்கும் ஆழத்திற்கு சமம்.

உருவான விதம்:

சூரிய குடும்பம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் அமைப்பில் உருவான போது, ஈர்ப்பு விசை வாயு மற்றும் தூசியை ஒன்றாக சேர்த்து வெள்ளி கோள் கிரகத்தை உருவாக்கியது. அதன் சக நிலப்பரப்பு கிரகங்களைப் போலவே, Venus-க்கு ஒரு மைய கோர், ஒரு பாறை மேன்டல் மற்றும் ஒரு திட மேலோடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வெள்ளி கோள் அமைப்பு:

Venus Planet Information in Tamil

வெள்ளி கோள் கிட்டத்தட்ட பூமியை போன்று வடிவமைப்பை பெற்றிருக்கும். இது இரும்பு மையத்தை கொண்டுள்ளது. வெள்ளி கோளானது சுமார் 3,200 கி.மீ சுற்றளவு உடையது. வெள்ளி கோளிற்கு மேல் சூடான பாறையால் செய்யப்பட்ட கவசம் கிரகத்தின் உள் வெப்பத்தால் மெதுவாக கொதிக்கிறது.

வெள்ளி கோளின் மேற்பரப்பு பாறையின் மெல்லிய மேலோடு கொண்டது ஆகும். இது அதன் கவசத்தை மாற்றி எரிமலைகளை உருவாக்குகின்றது. இதன் மேற்பரப்பில் சுமார் 80% எரிமலை சமவெளிகளால் மூடப்பட்டுள்ளது. மேலும், இதில் 70% சமவெளிகள் மற்றும் 10% மென்மையான மடல் சமவெளிகள் உள்ளது.

9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்

வெள்ளி கோளின் மேற்பரப்பு:

விண்வெளியில் இருந்து, வெள்ளி கோள் பிரகாசமான வெள்ளை நிறத்தில் தெறித்து காட்சியளிக்கிறது. ஏனெனில் இது சூரிய ஒளியை சிதறடிக்கும் மேகங்களை கொண்டு மூடப்பட்டுள்ளது. மேற்பரப்பில் உள்ள பாறைகள், பூமியில் உள்ள பாறைகளைப் போல சாம்பல் நிறத்தின் உள்ளன, ஆனால் அடர்த்தியான வளிமண்டலம் சூரிய ஒளியை Filter செய்கின்றது, எனவே நீங்கள் Venus-ல் நின்று பார்த்தால் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.

Venus மேற்பரப்பில் பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் அயிரக்கணக்கான பல எரிமலைகளை கொண்டுள்ளது. இதில் 11 கிலோமீட்டர் (36,000 அடி) உயரமான Maxwell Montes மலை அமைந்துள்ளது. இது Lakshmi Planum-ன் சுமார் 6.4 கிலோமீட்டர் உயரத்திலும், சுமார் 853 கிலோமீட்டர் நீளமும் மற்றும் 700 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.

நிலப்பரப்பு தூசி நிறைந்ததாகவும், மேற்பரப்பு வெப்ப நிலை 880 டிகிரி பாரன்ஹீட்டை (471 டிகிரி செல்சியஸ்) அடையும்.

வெள்ளி கோளின் அளவு மற்றும் தூர கணக்கீடு:

 வெள்ளி கோள் பற்றிய தகவல்

வெள்ளி கோளானது 6,051 கிமீ ஆரத்தையும், 12.104 கிமீ விட்டத்தினையும் கொண்டுள்ளது. மேலும் பூமியை விட சற்று சிறியது.

சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் (0.7 AU) தொலைவில் Venus உள்ளது. சூரிய ஒளி சூரியனில் இருந்து Venus-க்கு பயணிக்க 6 நிமிடங்கள் ஆகும்.

வெள்ளி கிரகம் பூமியில் இருந்து சுமர் 241.9 million km தொலைவில் அமைந்துள்ளது.
இதை வானத்தில் பார்க்கும் போது ஒரு வெள்ளை நிர நட்சதிரம் போல தோன்றும்.
இது பெரும்பாலும் பூமியில் அடிவானத்தில் பார்க்க முடியும்.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் நன்றி வணக்கம்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil