“வெறும் கையில் முழம் போடுவது” என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Verum Kaiyil Mulam Poduvathu

பொதுவாக நாம் நிறைய வகையான பழமொழிகள் தெரிந்துக்கொண்டு இருந்து இருப்போம். அதிலும் குறிப்பாக அதனை பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். அப்படி நாம் பேசும் ஒவ்வொரு பழமொழிக்கும் தனி அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக மற்றவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பிள்ளையை வளர்த்தால் கூட அதற்கு ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளரும் என்று நாம் அனைவரிடமும் கூறுவோம். அந்த வகையில் நமக்கு தெரியாத நிறைய பழமொழிகளிக்கான அர்த்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இன்று “வெறும் கையில் முழம் போடுவது” என்ற பழமொழிக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம். 

“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

“வெறும் கையில் முழம் போடுவது” என்ற பழமொழிக்கான விளக்கம்:

 வெறும் கையில் முழம் போடுவது

பொதுவாக நாம் ஒரு பொருளை அளக்க வேண்டும் என்றால் அதற்கு நீட்டல் அளவை, ஜான், காலடி, முழம் என்று தமிழ் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் காலப்போக்கில் இவை அனைத்தும் இன்ச், மில்லி மீட்டர், சென்டி மீட்டர் மற்றும் அடி இதுபோன்ற எல்லாம் இப்போது சொல்லப்பட்டு வருகிறது. இதுபோன்ற சொற்கள் அனைத்தும் எதாவது ஒன்றை அளக்கும் அளவியினை குறிக்கிறது.

அதேபோல நமது கையில் இருக்கும் நடுவிரலானது நுனி முதல் விரல் கடைசி வரை உள்ள அளவினை முழம் என்ற சொல்லால் கூறுகிறோம். ஏனென்றால் அதனையுடைய முழு அளவு என்பது முழம் ஆகும்.  இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் முழம் என்ற சொல்லாகும்.

 நாம் பூ, துணி மற்றும் கயிறு இந்த மூன்று பொருட்களை வாங்க செல்லும் போது உங்களுக்கு எத்தனை முழம் வேண்டும் என்று கேட்டு அதனை முழங்கையால் அளந்து கொடுப்பார்கள். ஏனென்றால் இதுபோன்ற பொருட்களை தான் நமது கையால் அளந்து கொடுக்க முடியும். அப்படி அளக்கும் போது நமது கையில் எதுவும் இருக்காது. இதுவே வெறும் கையால் முழம் போடுவது என்ற பழமொழிக்கான அர்த்தம் ஆகும்.  

அதுமட்டும் இல்லாமல் ஒருவர் எதாவது ஒரு பொருளையோ அல்லது வீடையோ கட்டவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்று ஆசைப்பட்டு திட்டமிட்டு இருப்பார்கள்.

ஆனால் கையில் சுத்தமாக பணம் இல்லாமல் திட்டம் மட்டும் போட்டு கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற செயலை செய்வதற்கு வெறும் கையில் முழம் போடுவது என்பது பொருத்தமான பழமொழியாகும்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement