தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்..! Thanneer Kanavu Palangal in Tamil..!

Advertisement

நீரை கனவில் கண்டால் என்ன பலன்..! Water Kanavu Palangal in Tamil..! 

ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக கனவில் நீரினை கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். கனவு என்பது நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. சில நேரத்தில் நம் கனவானது நம்முடைய எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவுறுத்துகிறது என்றும் கூட சொல்லலாம்.

நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் ஒவ்வொரு பொருளும், தனி தனி அர்த்தங்களும் உள்ளன. அதனை சரியாக புரிந்துகொண்டால் எதிர்காலம் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த பதிவில் தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் (thanneer kanavu palan) என்று விரிவாக படித்தறியலாம் வாங்க..! 

இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

கனவில் நீர் மற்றும் வெள்ளம் வந்தால் என்ன பலன்/ கனவில் கடல் வந்தால் என்ன பலன்:

 • உங்கள் கனவில் வெள்ளம் வந்தால் ஏதோ தீமை நடக்கப்போகிறது என்ற அறிகுறியாகும்.
 • கனவில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடுவது போன்று வந்தால் வாழ்க்கையில் பதற்றம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்ற அறிகுறியாகும்.
 • வெள்ளம் குறைந்து ஓடுவது போன்று கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றம் மற்றும் சிந்தனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

தண்ணீர் நிரம்பி வழிவது போன்று கனவு:

 • தண்ணீரானது மிதமான வேக நிலையில் பாய்ந்து வருவது போன்று கனவில் வந்தால் தீராமல் இருந்த வாழ்க்கை பிரச்சனை தீர்ந்துவிடும்.
 • கனவில் தண்ணீர் வேகமாக நிரம்பி வழிவது போன்று கண்டால் மனதில் உள்ளவற்றை அடுத்தவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற அறிகுறியாகும்.

தண்ணீர் உயர்வது போன்று கனவு பலன்:

 • நீரானது அனைத்து வடிவங்களையும் எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. நம் கனவில் தண்ணீர் பற்றிய கனவானது நம் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும், மறுபுறம் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.
 • நீர் உயர்வது போன்று கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இப்போது நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களை குறிப்பதாகும்.
newகுழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..!

வீட்டிற்குள் தண்ணீர் இருப்பது போன்று கனவு கண்டால் என்ன பலன்:

 • வீட்டிற்குள் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுவது போன்று கனவில் கண்டால் பெருமளவில் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படுவதன் அர்த்தமாகும்.
 • இந்த கனவானது உங்களுடைய வீட்டை பற்றியோ, குழந்தை பருவம் பற்றியோ அல்லது மறந்து போன உணர்ச்சியின் அடையாளமாக கூட இருக்கலாம் என்று இந்த கனவின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.

அலைகள் மற்றும் நீர் பற்றிய கனவு பலன்:

 • நீங்கள் காணும் கனவில் கடல் மற்றும் கடல் அலைகள் வந்தால் நம்முடைய ஆழமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.
 • பெரிய அலைகள் இருக்கும் கடல் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குள் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்தால் வாழ்க்கையில் ஏற்பட போகும் அச்சத்தினை குறிக்கின்றது.
 • கனவில் சுனாமி அளவிற்கு பேரலை வந்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டம் ஏற்படக்கூடிய செய்தி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

கனவில் நீர் வந்தால் / Thanneer Kanavil Vanthal / தண்ணீர் கனவில் வந்தால்:

 • ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.

வறண்ட குளம் இருப்பது போல் கனவில் வந்தால்:

 • குளம் கனவில் வந்தால் – Kulam Kanavu Palan: கனவில் வறண்ட குளம் இருப்பது போன்று வந்தால் செலவுகள் அதிகமாக வரப்போகிறது என்று அர்த்தம்.
 • மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வருவதற்கு தாமதம் ஆகும்.

குளத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்: 

 • குளம் கனவில் வந்தால்: குளங்களில் அதிகமாக தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பெரியவர்களிடம் இருந்து நல் ஆதரவும், நிறைய பலனும் கிடைக்கும்.
 • பல நாட்களாக தீராமல் இருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குளத்தில் தாமரை இருப்பது போல் கனவு கண்டால்:

 • குளத்தில் தாமரை மலர் இருப்பது போல் கனவு கண்டால் கடன் சுமை தீர்ந்து அதிக பணவரவு வருவதற்கு வாய்ப்புள்ளது.
 • குடும்பத்தில் ஒற்றுமையும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும் இருக்கும்.

குளத்தில் கால் கழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • குளத்தில் நமது கால் பகுதிகளை கழுவுவது போல் கனவு கண்டால் புதிய உற்சாகம் ஏற்படும்.
 • மேலும் ஒளிமயமான எதிர்காலத்தினை நோக்கி செல்வீர்கள்.

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • குளத்தில் குளிப்பது அல்லது தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றியினை யாராலும் பெற இயலாது என்று அர்த்தமாகும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப் போகிறார் என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது.

தண்ணீரில் தத்தளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • தண்ணீரில் தத்தளிப்பது போல் கனவு கண்டால் புதியதாக அறிமுகம் ஆனவர்களால் சிரமம் ஏற்படும்.
 • மேலும் நெருங்கிய உறவினர்களால் மன கஷ்டம் ஏற்பட்டு நீங்கும்.
 • திடீர் தனலாபம் உண்டாகும்.

அருவியில் நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • நம்முடைய ஆழ்ந்த கனவில் அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் வந்தால் எதிர்ப்பாராத அளவிற்கு திடீர் பணவரவு அதிகரிக்கும்.
 • செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.
 • மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய செய்தி வரும். மேலும் மதிப்பும், மரியாதையும் உயர்ந்து தலை நிமிர்ந்து நடப்பீர்கள்..

தண்ணீரில் வீடு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

 • கனவில் தண்ணீரில் வீடு இருப்பது போல் வந்தால் செல்வ செழிப்பு உங்களை தேடி வரும்.
 • உறவினர்களால் தேவையில்லாமல் மன கஷ்டமும், வீண் அலைச்சலும் ஏற்படும்.
 • உங்களுடைய நண்பர்களால் நன்மை தரக்கூடிய விஷயமும், பணவரவும் இருக்கும்.

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்: 

 • கனவில் தண்ணீரில் மூழ்குவது போல் கண்டால் தங்களுடைய குழந்தை செல்வங்களால் சந்தோஷம் கிடைக்கும்.
 • எப்போதோ செய்த நன்மைக்கு பலன் இப்போது கிடைக்கும்.

மரம்/ செடிகளுக்கு தண்ணீர் விடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்:

 • நம் கனவில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் கஷ்டத்தில் இருக்க கூடிய உங்களுக்கு தானாகவே தேடி வந்து உதவியினை செய்வார்கள். இதனால் மன கஷ்டம் நீங்கி மகழ்ச்சி அடைவீர்கள்.
 • புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தோல்விகள் அனைத்தும் விலகி வெற்றிகள் மட்டுமே அடைவீர்கள்.

வெள்ளம் வருவது போல் கனவு வந்தால் :

வெள்ளம் வருவது போல் கனவு வருவது உங்களுக்கு நடக்க இருக்கும் பிரச்னையை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதை இந்த கனவு உணர்த்துகிறது. மேலும் உங்கள் பிரச்சனைகள் வர இருப்பதை கனவு உணர்த்துகிறது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement