டூத் பேஸ்ட்டை வாங்குவதற்கு முன்பு இதை எல்லாம் கூட கவனிக்கணுமாம்..!

Advertisement

பற்பசை

இன்று மட்டும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து காலையில் எழுந்து உடன் பல்துலக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த பழக்கம் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட அவற்றை பயன்படுத்தும் முறை மற்றும் பொருள் தான் வேறுபட்டிருக்கிறது. ஆரம்பகாலத்தில் வேப்பங்குச்சியில் ஆரம்பித்து அதன் பிறகு பற்பொடியில் வந்து இப்போது பற்பசையில் என மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் அனைவரும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே இருக்கிறது. எனவே டூத் பேஸ்ட் வாங்குவதற்கு முன்பு நாம் எதனை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

What to Look Out For in Toothpaste in Tamil:

parpasai

நாம் எப்போதும் டூத் பேஸ்ட் வாங்கும் போது நமக்கு பிடித்ததை மட்டும் தான் வாங்குவோம். ஏனென்றால் நம்முடைய கவனம் அதில் தான் அதிகமாக இருக்கிறது.

அதுபோல எல்லாரிடமும் ஒரு இயல்பான பழக்கமும் இருக்கிறது. அது என்னவென்றால் நமக்கு தேவை பல்துலக்க உதவும் பற்பசை அது எந்த நிறத்தில் இருந்தால் நமக்கு என்ன என்று தான் நினைக்கிறார்கள்.

ஆனால் இப்படி நாம் கவனிக்காமல் விடும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமது உடலில் ஒரு சில பிரச்சனையை வரச்செய்யும். ஆகாயம் டூத் பேஸ்ட் வாங்கு போது நாம் கவனிக்க வேண்டியவை என்ன என்றால்..?

 நமது உடலில் வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நாம் எல்லா விதமான பற்பசையினையும் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் டூத் பேஸ்ட்டில் Sodium Lauryl Sulfate Flavor என்ற பொருள் ஆன்டிபயாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும். அதனால் இந்த டூத் பேஸ்டை நாம் பயன்படுத்தும் போது நமது உடலில் உள்ள அல்சர் மற்றும் வாய்ப்புண் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  

ஆகவே அல்சர் மற்றும் வாய்ப்புண் உள்ளவர்கள் Sodium Lauryl Sulfate Flavor இல்லாமல் SLS உள்ள டூத் பேஸ்ட்டை எது என பார்த்து வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement