வீட்டுத்தரைக்கு மார்பிள், டைல்ஸ், கிரானைட் இதில் எது சிறந்தது? | Which is Better Tiles or Marble or Granite in Tamil
அனைவருக்கும் வீடு கட்டுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அத்தகைய கனவு நிஜமாக போகிறது என்றால், அந்த வீட்டிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதாவது அந்த வீட்டை வாஸ்துப்படி எப்படி கட்ட வேண்டும், வீட்டிற்கு எந்த கல்லை தேர்வு செய்ய வேண்டும், எந்த சிமெண்ட் தேர்வு செய்ய வேண்டும், என்ன கதவுகளை தேர்வு செய்ய வேண்டும், என்ன ஜன்னல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அந்த வகையில் வீட்டுத்தரைக்கு மார்பிள் சிறந்ததா?, டைல்ஸ் சிறந்ததா?, கிரானைட் சிறந்ததா? என்ற குழப்பம் இருக்கும். ஆக உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவு இருக்கும். இங்கு வீட்டுத்தரைக்கு மார்பிள், டைல்ஸ், கிரானைட் இதில் எது சிறந்தது? என்று தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
Tiles Marble Granite Difference in Tamil
டைல்ஸ் வீட்டிற்கு ஏற்றதா? – Tiles:
டைல்ஸ் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வீட்டிற்கு பயன்படுத்துகின்றன, இதனுடைய விலையும் மலிவாகத்தான் இருக்கும், மேலும் பலவகையான டிசைன்களில் கிடைக்கிறது.
இந்த டைல்ஸ் ஒரு Square Feet 28 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை விற்பனை விலை ஆரம்பிக்கிறது. டைல்ஸை தரையில் செட் செய்யும் வேலையும் எளிதாக தான் இருக்கும். ஒரு Square Feet டைல்ஸை தரையில் ஓட்டுவதற்க்கான செலவு 14 ரூபாயில் இருந்து 15 ரூபாய் தான் வசூல் செய்வார்கள்.
மேலும் டைல்ஸை உங்கள் ஊரில் உள்ள நல்ல கடையில் கூட மிக எளிதாக வாங்கிக்கொள்ள முடியும். போக்குவரத்து செலவு குறைவாக இருக்கும்.
டைல்ஸ் எளிதில் உடையக்கூடியது. ஆனால் மார்பிள்ஸ் மற்றும் கிரானைட் எளிதில் உடையாது மற்றும் வலிமையானதும் கூட.
சிறியவர்கள், பெரியவர்கள் டைல்ஸில் நடக்கும்போது மிக கவனமாக நடக்க வேண்டும். ஏனென்றால் டைல்ஸ் எளிதில் ஒருவரை வலிக்கிவிடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மார்பிள் மற்றும் கிரானைட்:
இந்த மார்பிள் மற்றும் கிரானைட் பொறுத்தவரை விலை சற்று அதிகமாக இருக்கும். ஒரு Square Feet மார்பிள் மற்றும் கிரானைட் விலை 60 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஒரு Square Feet மார்பிள் மற்றும் கிரானைட் தரையில் ஓட்டுவதற்க்கான செலவு 25 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை வசூல் செய்வார்கள்.
உங்கள் ஊரில் இந்த மார்பிள் மற்றும் கிரானைட்டை எளிதாக அதுவும் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் வாங்க முடியாது. பெரிய பெரிய சிட்டியில் தான் வாங்க வேண்டியதாக இருக்கும். அதற்க்கான போக்குவரத்து செலவும் அதிகமாக தான் இருக்கும்.
மார்பிள் வீட்டுத்தரைக்கு ஏற்றதா? அதில் உள்ள பிரச்சனை என்ன? – Marble Tiles:
மார்பிள் வீட்டிற்கு ஏற்றது தான், இருந்தாலும் அதனை தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனுடைய பளபளப்பு தன்மை மங்கி போய்விடும்.
மேலும் இது லைட் கலரில் மட்டும் தான் கிடைக்கும். டார்க் நிறங்களில் வாங்க முடியாது.
குறிப்பாக மார்பிள் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியது ஆக குளியல் அறை, சமையல் அறை இது போன்ற இடங்களில் மார்பிள் பயன்படுத்த கூடாது.
மார்பிளில் ஏதாவது கறைபட்டுவிட்டது என்றால் உடனே துடைத்துவிட வேண்டும். இல்லையென்றால் மார்பிள்ஸ் அந்த கறையை உறிஞ்சிக்கொள்ளும். பிறகு நீங்கள் என்ன தான் துடைத்தாலும் அந்த கறை நீங்காது அப்படியே இருக்கும்.
மார்பிள்ஸ் போட்டவுடன் ஒரு முறை பாலிஸ் செய்ய வேண்டும், அதேபோல் சிறிது நாள் கழித்து அந்த மார்பிள்ஸ் உள்ள ஷைனிங் போன பிறகு மீண்டும் பாலிஸ் போட வேண்டியதாக இருக்கும்.
ஆனால் இது போன்ற பிரச்சனைகள் டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களில் இல்லை.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2023
கிரானைட் – Granite Tiles:
கிரானைட் கல் பொறுத்தவரை இதுவும் விலை அதிகமானது. கிட்சன், படிக்கட்டு இதுபோன்ற இடங்களில் இந்த கல்லை பயன்படுத்தலாம். மற்றபடி ஹாலில் பயன்படுத்தலாம். கால்களில் ஸ்லீப்பர் அணிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கால் வலி ஏற்படும். இந்த பிரச்சனை மார்பிள்ஸ் கற்களிலும் உள்ளது. ஆக செப்பல் அணிந்துக்கொண்டுதான் அவசியம் நடக்க வேண்டும்.
மேலும் கிரானைட் கற்களை வீட்டில் பயன்படுத்தும் போது குளிர் காலத்தில் அதிக குளிர்ச்சியாக இருக்கும். அதேபோல் வெயில் காலத்தில் அதே அளவிற்கு வெப்பமாக இருக்கும்.
மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டு குறிப்பிட்ட கற்களில் ஒரு வகையான ரேடியேஷன் வெளியாகுமாம். ஆக அதனை நாம் ரொம்ப காலமாக சுவாசித்து வந்தோம் என்றால் நுரையீரல் புற்று நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக இந்த மார்பிள் மற்றும் கிரானைட் கற்களையும் வீட்டிற்கு பயன்படுத்தும் போது அந்த வீட்டில் அதிக காற்றோட்டம் இருக்க வேண்டும்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |